English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Adamite
n. ஆதம் மரபினர், மனித இனத்தவர், உடையின்றித் திரிபவர்.
Adapt
v. பொருத்தமாக்கு, மாற்றி அமை, வேறுபடுத்தி அமை, தழுவி எழுது.
Adaptability
n. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
Adaptable
a. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Adaptation
n. வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
Adapter
n. மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Adaptive
a. மாற்றி அமைக்க இடங்கொடுக்கிற, மாற்றி அமைக்கத்தக்க.
Adaxial
a. ஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய.
Add
v. சேர், இணை, தொகை கணக்கிடு, தொடர்நது கூறு, மிகு.
Addax
n. நீண்ட முறுக்கிய கொம்புகளையுடைய ஆப்பிரிக்கமான்.
Addendum
n. பின் இணைப்பு.
Adder
-1 n. கூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி.
Adder
-2 n. விரியன் பாம்பு.
Addict
-1 n. கெட்ட பழக்கத்திற்கு அடிமை.
Addict
-2 v. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக்கு.
Addiction
n. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல்.
Addisions disease
n. வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Addition
n. கூட்டல், கூட்டல் கணக்கு, சேர்ப்பு.