English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Analogise
v. ஒப்புமைப்படுத்திக் காட்டு, ஒப்புமை மூலம் விளக்கு, உவமை பயன்படுத்து, ஒப்பாயிரு, ஒத்திசை.
Analogist
n. ஒப்புமை காண்பவர், உவமையைப் பயன்படுத்துபவர், ஒப்புமை நாடுபவர், சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Analogous
a. ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Analogue
n. ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.
Analogy
n. ஒப்பு, ஒத்திசைவு, இணையொப்பு, ஒத்த உறவு,(கண.) ஒப்புமை, ஒப்புடைமை.
Analphabet, analphabete
n. எழுத்தறிவற்றவர்,(பெ.) நெடுங்கணக்கை அறியாத, எழுத்தறிவற்ற.
Analphabetic
a. நெடுங்கணக்குச் சாராத, அகர வரிசை முறையில் இல்லாத, முற்றிலும் எழுத்தறிவற்ற.
Analysable
a. பிரித்தாராயத்தக்க, கூறுபடுத்தக்கூடிய.
Analyse
v. கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண், (இலக்,) பாகுபடுத்து, (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
Analyser
n. பகுத்தாய்பவர், ஔதக்கருவியில் ஔத முனைப்படுத்தும் இணைப்பட்டை.
Analysis
n. பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
Analyst
n. மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
Analytic
a. பகுப்பாராய்ச்சி சார்ந்த, பகுத்தாய்கிற, மூலமெய்ம்மைகள் காண்கிற.
Analytical
a. பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற,(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
Analytics
n. ஆராய்ச்சிமுறை நுல், தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல், பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
Anamnesis
n. முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள், மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு, நோயாளியின் பழைய நினைவு, பிளேட்டோ வின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Anamorphic
a. போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
Anamorphosis
n. குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம், நேர் திரிவடிவம், (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anamorphous
a. திரிபு வடிவமுடைய, நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Anana,ananas
அண்ணாசிப்பழம்.