English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Blod-brother
n. ஒரே வயிற்று உல்ன்பிறப்பாளர்.
Bloke
n. (பே-வ.) ஆள், பேர்வழி, (கப்.) போர்த்தலைவர்.
Blond
n. பசுந்தலை இளம்பொன் மேனியர், (பெ,) வெண்பொன் நிறமான, மயிர் வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blonde
n. (பிர.) பசுந்தலை இளம்பொன் மேனியர், (பெ.) பெண்டிரில். வெண்பொன் நிறமான, பெண்டிர் மயிர்வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blood
n. குருதி, இரத்தம், செந்நீர், சோரி, குடும்ப உறவு, மரபு, இனம், உயர்மரபு, நன்மரபு வாய்ந்த குதிரை, நகர் சுற்றும் பகடி, உணர்ச்சி நிலை, உணர்ச்சி, சிற்றின்ப உணாச்சி, கோபம், கொலை, பலி, கொலைக் குற்றம், சாறு, செஞ்சாறு, (வினை) (மரு.) குருதியெடு, குருதி வடியவடி, குருதிபூசு, போர்ப்பயிற்சி தொடங்கு, வேட்டைப் பயிற்சி தொடங்கு, வேட்டைநாய்க்கு முழ்ற் குருதி மவ்ம் காட்டு.
Blood-and-thunder
a. திடுக்கிடுநிகழ்ச்சி செறிந்த, மட்டு மீறி உணர்ச்சிக் கொந்தளிப்புடைய.
Blood-bath
n. குருதிக்குளிப்பு, கொலையாட்டம், படுகொலைக்களரி.
Blood-bespotted
a. குருதி சிதறப்பட்ட, குருதிக்கறை படிந்த.
Blood-bird
n. ஆஸ்திரேலியா மாநிலக் கண்டத்துக்குரிய தேன் உண்ணும் செந்நிறப் பறவைவகை.
Blood-boltered
a. குருதி கட்டிய, குருதியில் புரண்டு சடையான.
Blood-curdling
a. விறைக்க வைக்கிற, குருதி கொதிக்க வைக்கிற, பேரச்சம் தருகிற.
Blood-dust
n. குருதியிலுள்ள நிறமற்ற சிறுதுப்ள்.
Blooded
a. குருதி உடைய, தூய இரத்தம் உடைய, நன்மரபு வழிவந்த, குருதித்தீக்கை பெற்றுள்ள.
Blood-feud
n. குடும்பச் சண்டை, பழிக்குப்பழி நாடிய பகைச்செயல் பழி.
Blood-group
n. குருதிப்பகுப்பினம், குருதியின் நால்வகைப் பழூப்பினங்களுள் ஒன்று.
Blood-guilty
a. கொலைமுயற்சிக் குற்றமுடைய, குருதி சிந்திய குற்றம் வாய்ந்த.
Blood-heat
n. மனிதனின் குருதி வெப்பப் பொது அளவு. (ஹீக்ஷ் பாகை பாரன்ஹைட்).
Blood-horse
n. இனக்குதிரை, நன்மரபுப் பரிமா.
Blood-hound
n. மோப்ப வேட்டைநாய் வகை.