English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Blinker
n. இமைப்பவர், அரைக்கண் பார்ப்பவர், குதிரையின் கண் மறைக்கும் தோல் வார்.
Blinks
n. சேற்றில் வளரும் பாசி வகை.
Blip
n. சேணியக்கமானியின் திரையிற் காணப்படும் பொருளின் வடிவம்.
Bliss
n. பேரின்பம், கலப்பற்ற இன்பம், மகிழ்ச்சி, கழிபேருவகை.
Blissful
a. இன்பநிறைவுடைய, கழிமகிழ்வுடைய.
Blissfully
adv. கலப்பற்ற உவகையுடன், சிறு கவலையும் இல்லாமல்.
Blister
n. கொப்புளம், பொக்குளம், உராய்வுக்காயம், நெருப்புப்புண், உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு, புடைப்பு, பொடிப்பு, பொருக்கு, (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள், கொப்புளப்பற்று, காரச்சீலை, (வினை) கொப்புளம் உண்டு பண்ணு, புண்ணுக்கு, கொப்புளி, கொப்புளமாய் எழு, புண்ணாகு, கொப்புளித்துப் போ.
Blistered-steel, blister-steel
n. காய்ப்புடைய தகட்டிரும்பு.
Blister-plaster
n. காரச்சீலை, கொப்புளப்பற்று.
Blistery
a. கொப்புளமுடைய, காய்ப்புகள் நிரம்பிய.
Blithe
a. களிகிளர்ச்சியுடைய, உவகைமிக்க, இனமகிழ்ச்சியுடைய.
Blithering
a. (பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற, வம்பளக்கிற, படுமோசமான, பதடியான.
Blithesome
a. களிப்பார்ந்த, ஒயிலான.
Blitz
n. விமானக்குண்டுவீச்சு, திடீர்த்தாக்குதல், (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு, விமானத்தாக்குதலால் அழிவுசெய்.
Blitzkreig
n. (செர்.) அதிர்ச்சித்தாக்குதல், மின்னல் போர் முறை.
Blizzard
n. பனிப்புயல், பனிச்சூறாவளி.
Blizzardly, blizzardous
a. பனிப்புயல் போன்ற, பனிச் சூறாவளி சார்ந்த.
Bllighter
n. அழிவுக்காரணம், தொல்லை தருபவர், சனியன், இரவலர், பிச்சைக்காரர், கீழோர்.
Bllind-story
n. திருக்கோயில் சிறகுமுகட்டுக்கும் பலகணிகட்கும் இடைப்பட்ட நிழலார்ந்த பகுதி.
Bloat
v. நீரில் உப்பவை, காற்றுட்டி ஊதவை, வீங்கச் செய், பெருக்கச் செய், உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு.