English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Blewit
n. உணவாகப் பயன்படும் காளான் வகை.
Blight
n. வெப்பு நோய், செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை, செடிப்பேன் வகை, புழுக்கம், கொடும் பழி, அழிவு, கேடு, நலிவு, (வினை) ஊறுபடுத்து, தீமைக்காளருக்கு, அழி.
Blimp
v. சிறு வேவு விமானம்.
Blimp
n. மீளாப் பிற்போக்காளியான முதிய அதிகாரி பேசும் படத்தில் ஒலிப்பதிவுக் கருவிக்குரிய ஓசைத்தடை காப்புடைய கட்டிடம்.
Blimpery, blimpishness
n. பிற்போக்குத் தன்மை.
Blind
n. பலகணித்திரை, மறைப்பு, மறைதிரை, தட்டி, கண் மறைப்பு, மாறாட்டம், சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண், (பெ.) பார்வையற்ற, கண்ணற்ற, குருடான, காணாத, கவனமற்ற, முன்னெச்சரிக்கையில்லாத, கூருணர்வற்ற, அறிவற்ற, நயமறியாத, மூர்க்கமான, ஆய்ந்தோய்ந்து பாராத, கண்மூடித்தனமான, குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற, வேண்டுமென்றே கவனிக்காத, புறக்கணிப்பான, கண்ணுக்குத் தெரியாத, மறைவான, செல்வழியற்ற மொட்டையான, வழிகாணாத, வழியுணர்வற்ற, இலக்கில்லாத, முறையற்ற, சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த, இருட்டான, வெறுமையான, மையில்லாத பொறித்தடமுடைய, தவறான முகவரியுடைய, பயனற்ற, பூக்காத, காய்க்காத, (வினை) குருடாக்கு, கண்கெடு, பார்வை மழுங்கவை, மறை, இருட்டாக்கு, தெரியாமல் போகச்செய், ஏமாற்று, அறிவு மழுங்கவை, உண்மையை மறை, கண்ணை மூடிக்கொண்டு செய்.
Blindage
n. படைத்துறை அரண் தட்டி, பாதுகாப்புத் தட்டி.
Blind-alley
n. முட்டுச்சந்து, (பெ.) வேறுசெல்வழியற்ற.
Blinded
a. குருடாக்கப்பட்ட, கண்மறைக்கப்பட்ட, அறிவு மழுக்கமெய்திய.
Blinder
n. குருடாக்குபவர், கண்மறைப்பவர், குதிரையின் கண்மறைப்பு வார்.
Blindfish
n. கண்ணிலா மீன்வகை.
Blindfold
a. கண்கட்டப்பட்ட, கண்மூடிச்செய்யப்பட்ட, கண்மூடியான, கருத்தற்ற, மடத்தனமான, (வினை) கண்ணைக் கட்டு, தவறாக வழிகாட்டு, (வினையடை) கண்கட்டுடன், கண்மூடித்தனமாய், மடத்தனமாக.
Blindgut
n. குடல் வால், குடல் முனை, முட்டுக் குழாய்.
Blinding
n. புதுப்பாதையில் மேற்பூச்சுப்பூசல், பாதை மேற்பூச்சு, (பெ.)குருடாக்குகிற, கண்கூசவைக்கிற.
Blindly
adv. பாராமல், தட்டித்தடவி, மடத்தனமாக, மூர்க்கமாக.
Blindness
n. குருட்டுத்தன்மை, கண்தெரியாமை, அறியாமை, மடமை.
Blind-worm
n. மெதுவாகச் செல்லும் நிலப்புழு வகை.
Blink
n. நிலையற்ற நோக்கு, கணநோக்கு, இமைப்பு, கணநேரக் காட்சி, வௌளொலி, பனிப்பரப்பின் எதிரொளி, (வினை)இமை, இமையசை, கண்மூடித்திற, அரைக்கண் பார், வௌளொளி வீசு, கணநேரக் காட்சியளி, புறக்கணி, கண்டும் காணாதது போலிரு, கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
Blinkard
n. நிலையற்ற நோக்குடையவர், ஓயாது இமை கொட்டுபவர், நொள்ளைக்கண்ணர்.