English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bodkin
n. கூர்முனையற்ற தடித்த ஊசி, துன்னுசி, தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு, (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி, குத்துவாள், உடைவாள், வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Bodleian
n. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர் தாமஸ் பாட்லி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட நுல் நிலையம்.
Body
n. உடல், உடற்பகுதி, சிறந்த பாகம், நடுப்பகுதி, உடற்பகுதிக்குரிய ஆடை, ஆடையில் உடற்பகுதி, கச்சு, பிணம், பருப்பொருட்சார்பு, பிழம்பு, நிறைவு, முழுமை, திண்மை, கெட்டிமை, ஔதயூடுருவாத் திண்ணிய வண்ணம், தனிமனிதன், குழுமம்,திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு, மெய்க்காவலர், பீடிகை நீங்கிய பத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை.
Body-builders ( vehicles )
உடலங் கட்டுநர் (ஊர்திகள்) ஊர்திகட்டுநர், வண்டி மேற்கூடு கட்டுநர்
Body-colour
n. சாயத்தின் நிறப்படிப்பாற்றல் அமைதி.
Body-guard
n. மெய்க்காவற்படை, மெய்க்காவலர்.
Body-line
n. மரப்பந்தாட்டத்தில் மேன்மேலும் பந்து விரைந்து உடல்மீது படும்படி ஆடப்படும்ர ஆட்டம்.
Body-santcher
n. பிணந்திருடி.
Body-servent
n. அணுக்க ஊழியர்.
Boeotian
n. முட்டாள், அறிவற்றவன், (பெ.) மழுங்கிய முளையுடைய,மட்டியான.
Boer
n. தென்னாப்பிரிக்க டச்சுக்காரர், (பெ.) தென்னாப்பிரிக்க இனத்தைச் சார்ந்த.
Bofors, Bofors gun
n. வானுர்தி எதிர்ப்புத் துப்பாக்கி.
Bog
n. சதுப்புநிலம், அழுவம், சேறு, சகதி, (வினை) சேற்றில் அமிழ், முழுகிப்போ.
Bogbutter
n. தழை நிலக்கரியில் காணப்படும் கொழுப்பு மிக்க நீர்க் கரியகம்.
Bogey
-1 n. குழிப்பந்தாட்டத்தில் கணிசன்ன மதிப்புடைய கெலிப்பெண்.
Bogginess
n. அழுவத்தன்மை, சதுப்புநில இயல்பு.
Boggle
v. அச்சத்தால் திடுக்கிடு, ஒதுங்கிநில், தயங்கு, தடைப்படு, தடைகூறு, ஐயங்களை எழுப்பு, தாக்காட்டு, இருகொருளிற் பேசு, தடுமாறு.
Boggy
n. சதுப்புத்தன்மையுள்ள.
Bogie
n. மொட்டைச் சகடம், தாழ்வான பாரவண்டி, ஊர்தியின் பின் அடியே கொளாவிக் கோக்கப்படும் அடிக் கட்டைச் சகடம்.
Bogland
n. சதுப்புநிலப் பரப்பு.