English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bootlicking
n. கெஞ்சுதல், (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய.
Boot-maker
n. புதைமிதி செய்பவர்.
Boot-making
n. புதைமிதித் தொழில், (பெ.) புதைமிதி செய்கின்ற.
Boots
n. உண்டி விடுதிப்பணியாள், விடுதியின் புதைமிதிதுடைப்பவன்.
Booty
n. கொள்ளைச் செல்வம், திருட்டுச்சொத்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருள்.
Booze
n. சாராயத்தைக் கூட்டமாகக் குடித்தல், கன் தொலைச்சு, (வினை) மிகுதியாகக்குடி, தொடர்ந்து குடி.
Boozy
a. குடிப்பழக்கம் மிகுதியாகவுள்ள, மிகுந்த குடிவெறியுள்ள.
Bopeep
n. குழந்தைகளின் 'கண்ணாம்பொத்தி' ஆட்டம்.
Bor
n. அண்டை வீட்டுக்காரர்.
Bora
-1 n. இத்தாலி நாடடுத்த அட்ரியாட்டிக் கடற்கரைப் பகுதியில் வீறூம் வடகிழக்குக் குளிர்காற்று.
Bora
-2 n. முஸ்லிம் வணிகர்.
Borachio
n. ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா, குடிவெறி இழிஞன்.
Boracic
a. பொரிகம் சார்ந்த.
Boracite
n. வௌதமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
Borage
n. தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை,
Borax
n. பொரிகம், நீருடை உவர உப்புவகை.
Borazon
n. மனித முஸ்ற்சியாலாக்கப்பட்டு வைரத்தினும் கடுமை வாய்ந்த சேர்மப் பொருள்வகை.
Bordeaux
n. தென் பிரான்சில் போர்டோ என்னுமிடத்துக்குரிய இன்தேறல் வகை.
Border
n. பக்கம், ஓரம், அருகு, கரை, எல்லை, எல்லைப்புறம், நாட்டின் எல்லை, தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு, உடையின் அழகுக்கரை, (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல், அணுகு, நெருங்கு, ஓரத்தை அமை, எல்லைகோலு, வரம்பிடு, ஆடை வகையில் கரையமை.
Bordereau
n. (பிர.) உள்ளடக்கக்குறிப்பு, நினைவுக்குறிப்பு.