English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ballm of Gilead
பண்டு நோவகற்று மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு.
Ballon dessai
n. (பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
Ballonet
n. புகைக்கூண்டு, அல்லது வானுர்தியில் உள்ள காற்றறைப் பை.
Balloon
n. ஆவிக்கூண்டு,புகைக்கூண்டு, விளையாட்டு ஊதற்பை, உப்பற்பையுறை, விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை, தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு, மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம், (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை,(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல், புகைக்கூண்டுபோல் பருமனாக, ஊது, உப்பலாகு.
Balloon barrage
புகைக்கூண்டுக் கட்டமைப்புனிணைக்கப்பட்ட எஃகுக் கம்பி வடத்தாலமான வானுர்தித் தாக்குதலுக்குரிய தடுப்பரண் காப்பு.
Balloon tire
பொறிவண்டியின் குறைவழுத்தமுடைய குழாய்ப்ட்டை.
Ballooner
n. ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்,(கப்) உப்பிய கப்பற்பாய்.
Balloonist
n. ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர், ஆவிக்கூண்டு இயக்குபவர்.
Ballot
-2 n. ஹ்0 முழ்ல் 120 இராத்தல் வரை எடையுள்ள சிறு கட்டு.
Ballot
-1 n. மறைவான வாக்களிப்பு, வாக்களிப்புச் சீட்டுகள், தாள் நறுக்கு, சீட்டு, திருவுளச்சீட்டெடுப்பு, (வினை) மறை வடக்கமாக வாக்களி, திருவுளச்சீட்டெடு, வாக்களி.
Ballotage
n. பிரஞ்சு நாட்டில் உரிய பெரும்பான்மை வாக்குப்பெறாக இருவரிடையே இரண்டாவது வாக்கெடுப்பு.
Ballot-box
n. வாக்களிப்புப் பெட்டி.
Ballot-paper
n. இரகசியத் தேர்தல்சீட்டு, குடவோலை.
Ball-point
n. ஊற்றுப்பேனாவில் மை ஒழுங்குபடுத்தும் உருள் குழைமுனை.
Ballproof
a. குண்டுகளால் துளைக்கப்பட முடியாத.
Balls
n. விரைகள், அறிவீனம்.
Ballyhoo
n. கீழ்த்தர ஆரவார விளம்பரம்.
Ballyrag
v. கேலிசெய், முரட்டு விளையாட்டில் ஈடுபடு.
Ballyragging
n. வசைச்சொல்லால் வதைத்தல், வினாக்களால் வதைத்தல்.
Balminess
n. நறுமணத்தன்மை.