English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ban(2),
ஹங்கேரி குரோசியா முதலிய மாவட்டங்களின் ரஅரரசப் பெயராட்சியாளர்.
Banal
a. பொதுப்படையான, பொதுநிலையான, நன்கறியப்பட்ட, சிறப்பற்ற, மிகச் சிறுதிறமான.
Banality
n. பொதுச்செய்தி, அற்பம்.
Banana
n. ஏற்றன் வாழை, நேந்திர வாழை, வாழை.
Banausian, banausic
கைவிளைஞரைச் சார்ந்த, நாகரிகமற்ற, மட்டமான.
Banc,banco
-1 n. பொதுச்சட்ட நீதிமன்றம்.
Banco
-2 n. பொருளகக் கணக்கு முறையில் வழங்கும் திட்ட நாணயம்.
Band
n. கட்டு, தளை, இழைக்கச்சை, தளைக்கயிறு, கட்டுக்கம்பி, இணைப்புத்தகடு, புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார், அரைக்கச்சை, சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை, வார், சக்கர இணைப்புப்பட்டை, வண்ணக்கரை, பட்டைக்கோடு, அடையாளச்சின்னம், குழு, குக்ஷ்ம் கூட்டணி, ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம், இசைமேளம், இசைக்கருவிக்கூட்டு, இசைக்கருவியாளர் குழாம், (வினை) கட்டு, இணை, வரிந்து கட்டு, ஒருங்கு கூட்டு, குழுவாக அமை, பட்டைப் கோடுகளிடு.
Bandage
n. கட்டு, கட்டுமானம், புண் கட்டுத்துணி, துணப்பட்டை, கண்கட்டு, (வினை) கட்டுப்போடு, வரிந்து கட்டு, கண்களைக் கட்டு.
Bandalore
n. விளையாட்டு வட்டு, திருதுவட்டு.
Bandanar bandanna
n. (இ.) வண்ணப்புள்ளியிட்ட கைக்குட்டை, மணிக்குட்டை.
Bandar
n. (இ.) குரங்கு வகை.
Bandbox
n. மாதர் உடையணிமணிகளுக்குரிய அட்டைப்பெட்டி.
Bandeau
n. மயிக்கொடி, முடிகட்டு கயிற்றிழை, பெண்டிர் தொப்பியின் உட்பட்டை, கண்ணுக்குரிய துணிக்கட்டு,
Bandelet
n. (க-க.) தூணின் சுற்றுவரிப்பட்டை.
Bandelier
n. துப்பாக்கிக் குண்டுகளுக்கான தோளணிப்பட்டை.
Banderilla
n. மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
Banderillero
n. கொடி கொண்ட எறிபடை ஏந்திய மஞ்சு விரட்டாளர்.
Banderol, banderole
பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி, போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி, அணியிழைச்சுருள், (க-க) பட்டயக்கல்.