English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brevet
n. படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம், நன்மதிப்புப் பதவி, (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி, மதிப்பியல்பான உயர்வுகொடு.
Breviary
n. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் நாடோ றும் ஓதும் திருமுறை நுல்.
Breviate
n. சிறுபொழிப்பு, சிறுசுருக்கம், வழக்குரைஞருக்குரிய வழக்காளியின் வழக்குறிப்பு.
Brevier
n. அச்சுருப்படிவ அளவு.
Brevity
n. சுருக்கம், செறிவு, காலத்தின் குறுகிய அளவு.
Brew
n. வடிப்பு, வடித்திறக்குதல், ஒருதடவை வடிப்பளவு, வடியத்தின் பண்பு, வடிப்புத்தரம், வடிப்புமுறை, வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி, காய்ச்சு, மது இறக்கு, கலக்கு, கலந்து உருவாக்கு, இட்டுக்கட்டி உண்டுபண்ணு, உள்ளீடாகச் சதிசெய், வடிப்பில் உருவாகு, கலந்து உருவாகு, உள்ளுறவிளை,
Brewage
n. வடித்திறக்குதல், வடிக்கப்பட்ட சரக்கு, வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.
Brewer
n. தேறல் வடிப்பவர், சாராயம் காய்ச்சுபவர்.
Breweries
வடிப்பகம், வடிசாலை
Brewery, brew-house
n. வடிப்பாலை, சாராயக்கிடங்கு.
Brewing
n. இன்தேறல் வடித்தல்.
Brewis
n. குழம்பு, மாட்டிறைச்சிச்சாறு.
Brewster
n. சாராயம் காய்ச்சுபவர்.
Bribable
a. கைக்கூலி கொடுத்து வசப்படுத்தக்கூடிய, கையுரையால் முடிவு மாற்றக்கூடிய.
Bribe
n. கைக்கூலி, இலஞ்சம், (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து, பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய், பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
Bribery
n. கைக்கூலி கொடுத்தல், இலஞ்ச ஊழல்.
Bric-a-brac
n. தொன்மை அரும்பொருள்களின் தொகுதி.
Brick
n. செங்கல், செங்கல் வடிவுள்ள பாளம், குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டு, செங்கல் வடிவுடைய அப்பப்பாளம், அப்பக்கட்டி, (வினை) செங்கல் அடுக்கிட்டு, செங்கல் பாவு, செங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு.
Brick works
செங்கல் தொழிற்சாலை-தொழிலகம்
Brick-bat
n. செங்கல் துண்டு, செங்கற்கட்டி.