English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bushy
a. புதர்கள் செறிந்த, புதர்போன்ற, அடர்ந்த, கற்றையான.
Busied, v. busy
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Busily
adv. சுறுசுறுப்பாக, முழு ஈடுபாட்டுடன், ஆழ்ந்து.
Business
n. ஈடுபட்ட தொழில், வாழ்க்கைத் தொழில், வாணிகம், மேற்கொள்ளப்பட்ட கடமை, ஊதியம், கருத்தீடுபாடுடைய பொருள், வாணிக நடவடிக்கை, வாணிகத் தொடர்பு, கொடுக்கல்வாங்கல், தொழில் துறைத் தொடர்பு, உறவு, அலுவல், தொழில் ஈடுபாடு, தொழில் தொடர்பு, தொடர்பு, நாடகத்தில் கதை நடப்பு, நிகழ்ச்சிப் போக்கு, (பே-வ.) பொருள், செய்தி.
Business-like
a. வினைத்திட்பமுடைய, செயலொழுங்கான, வாணிக முறைமை வழுவாத, செயலுக்கொத்த.
Business-man
n. வாணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர், வணிகர்.
Busk
-1 n. மார்புக்கச்சுக்கு முனைப்பு அளிப்பதற்குரிய எலும்பு அல்லது எஃகினாலான முகப்பு.
Busk
-2 n. (கப்.) கரையோரமாகச் சுற்றித்திரி, அங்குமிங்கும் செல், தேடச் செய்.
Busk(3),
ஏற்பாடு செய், உடை அணி, உடை அணிவி.
Busked
a. மார்புக்கச்சில் முனைப்புடைய முகப்புப் பொருத்தப்பட்ட.
Busker
n. நாடோ டிப் பாடகன், ஊர்சுற்றும் நடிகன்.
Buskin
n. முழந்தாளவான காலுறை, பண்டைக் கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களில் நடிப்போர் உயரமிகுத்துக் காட்ட வழங்கப்பட்ட மேட்டு உள்ளடி கொண்ட நீள்புதைமிதி.
Buskined
a. உயர்ந்த மொத்தையான உள்ளடி கொண்ட புதைமிதி அணிந்த, துன்பியலான.
Busman
n. பொறிவண்டி ஒட்டி, விசைக்கல வலவர்,
Buss
-1 n. முரட்டு முத்தம், (வினை) முரட்டுத்தனமாக முத்தமிடு.
Buss
-2 n. ஆலந்து நாட்டைச் சார்ந்த மீன்பிடிக்கும் சிறிய இருபாய்மரக்கலம்.
Bust
-1 n. மார்பளவான தலைச்சிலை, மார்புப்பகுதி, பெண்டிர்மாப்பு அமைதி.
Bustard
n. கொக்கு வரிசையில் சேர்க்கப்படும் பறவைவகை, வேகமாக ஓடக்கூடிய பேரினப் பறவைவகை.
Busted
a. மார்பு அமைவுடைய, மார்பளவாய தலைச்சிலையால் அழகு படுத்தப்பட்ட.