English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Batswing
n. வாவல் அடுப்பு, வௌவால் இறகு போன்ற வடிவுடைய அழல்காட்டும் பொறி அடுப்பு வகை.
Batta
n. (த.) படைத்துறையில் கொடுக்கப்படும் உதவிப்படி, படிச்செலவு, படிப்பணம், செவுப்படி, பட்டைச்சோறு.
Battalia
n. போரணி, அணிவழூப்புப் படையில் சிறப்புப் பிரிவு.
Battalion n,
அணிவகுத்த படை, போர் அணிப்பிரிவு.
Battels
n. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள், கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத்தொகைகள்.
Batten
-1 n. தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை, கம்பை, அள்ளு, பற்று, மின் விளக்குகளின் வரிசை, மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம், (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு, (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத
Batten
-2 n. பட்டுத்தறியில் ஊடுநூலைச் செறிவாகத்தள்ளும் இயங்கு சட்டம்.
Batten
-3 v. பேருண்கொள், தின்றுகொழு, கிடந்துதிளை.
Battening
n. சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
Batter
-1 n. நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள், ஓட்டுதற்கான பசை, அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு, (வினை) நை, நொறுக்கு, பீரங்கிகளைக் கொண்டு தாக்கு, கடுமையாக நடத்து, உருக்குலையுமாறுதகர், அடித்துப் பள்ளமுண்டாக்கு, உபயோகத்தின் மூலம் உர
Batter
-2 n. குத்துக்கோட்டிலிருந்து உள்பக்கமான சாய்வு, (வினை) உள்பக்கமாகச் சாய், நிலத்தளத்திலிருந்து மேல்நோக்கிச் சாய்.
Batter
-3 n. பந்தாட்டமட்டை கையாள்பவர், ஆட்டக்காரர்.
Battering-charge
n. பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு.
Battering-ram
n. மதிற்சுவர்களைத் தகர்ப்தற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்தூலம்.
Battering-train
n. முற்றுகை பீரங்கிகளின் தொகுதி.
Battery
n. அடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு.
Battery service
மின்கலப் பணியகம்
Batting
n. பந்துமட்டையைக் கையாளும் சதுரப்பாடு, மெத்தைகளுக்குரிய திணிப்புப்பொருள்.
Battle
-2 n. ஞாயில்கள் அமைத்துக்கொடு.
Battle(1), n.`
சண்டை, போர், மல்லாட்டம், சூழ்ச்சியாட்டம், போர்த்திறம், வெற்றி, (வினை) சண்டையிடு, போரிடு, எதிரிடு, மல்லாடு.