English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bergschrund
n. மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு.
Bergsonian
n. ஹென்ரி பெர்க்ஸன் என்னும் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், (பெ.) பெர்க்ஸனின் படைப்பாக்கமுடைய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bergylt
n. வடகடல் செம்மீன் வகை.
Berhyme
v. செய்யுளில் விரிவிரை எழுது, வசைக்கவி பாடு, செய்யுள் வடிவில் அமை.
Beriberi
n. தவிட்டான், ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய்.
Berkeleian
n. சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) பெர்க்லிக்குரிய, பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Berlin
n. வலவன் இருக்கை தனியாக அமைந்துள்ள விசைவண்டி.
Berm
n. மதிலின் பிதுக்கம்.
Bernardine
n. துறவிட்ட அமைப்பைச்சோர்ந்தவர், (பெ) துறிவமட அமைப்புச் சார்ந்த.
Berried
a. கனிகளைக் கொண்ட.
Berries, n. berry
-1 என்பதன் பன்மை.
Berry
-1 n. தீங்கனி, கொட்டையில்லாப்பழம், (தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம், காப்பிக்கொட்டை, கூலமணி, கோதுமைமணி, நண்டுபோன்ற உயிரினங்களின் முட்டை, அன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ், (வினை) கனி விளையப்பெறு, விளைந்து திரளாருப்பெறு, திரிந்து கனிதிரட்டு.
Berry
-2 n. கூழ், புற்கை.
Berryllium
n. கெட்டியான வௌளை உலோகத் தனிம வகை.
Bersaglieri
n. pl. முன்னாட்களில் துப்பாக்கியேந்திய தலைசிறந்த இத்தாலியக் காலாட்படைப் பிரிவினர்.
Berserk, berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன், (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Berth
n. கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம், கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம், நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம், உரியஇடம், கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம், நற்பணியிடம், (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு, துயிலிடம் அமைத்துக்கொடு.
Bertha, berthe
பெண்களின் சட்டையில் தோள்களில் மடிந்து விழும் கழுத்துப்பட்டை.
Berthon boat
n. மடித்துச் சுருக்கக்கூடிய படகுவகை.
Bertillonage, Bertillon system
n. அளவுகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கும் அல்பான்சி பெர்ட்டில்லான் என்பவரின் முறை.