English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bentwood
n. நாற்காலி முதலியவை செய்வதற்காகச் செயற்கையாய் வளைக்கப்பட்ட மரம் (பெ). செயற்கையாய் வளைக்கப்பட்ட மரத்தினால் இயன்ற.
Benty
a. வளைவான, விறைத்த அல்லது கம்பியனைய தண்டுள்ள நாணற்புல் போன்ற.
Benumb
v. மரத்துப்போகச்செய், திமிர் அடையும்படி செய், உணர்விழக்கச்செய், ஆற்றலிழக்கப்பண்ணு.
Benumbed
a. மரத்துப்போன, விறைத்த, உணர்ச்சியிழந்த.
Benzal
n. கசப்பு வாதுமை எண்ணெய்.
Benzene
n. சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள்.
Benzil
n. (வேதி.)சாம்பிராணியை உயிரகை ஆக்குவதனால் உண்டாகும் மஞ்சள்நிற மணிஉருச் சேர்மம்.
Benzine
n. நில எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்புக்கரையை நீக்குதற்குப் பயன்படுவதுமான கரிநீர்பக்கலவை.
Benzoate
n. சாம்பிராணிக் காடியுப்பு.
Benzocaine, benzocane
உடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம், வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Benzoic
a. சாம்பிராணிக்குரிய.
Benzoin
n. மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி.
Benzol, benzole
விசைவண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம்பிராணி எண்ணெய்.
Benzoyl
n. (வேதி.) சேர்க்கையில் மட்டுமே காணப்படும் ஓரணுமுக உறுப்பு பொருள்.
Benzpyrene
n. கீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள்.
Benzyl
n. (வேதி.) மரஎண்ணெய் கலந்த சாம்பிரானி எண்ணெயின் நீரகை மூலமாயுள்ள ஓரணுமுக அடிச்சரக்கு வகை.
Bepatched
a. ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட, முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே.
Bepepper
v. குண்டுமாரியால் தாக்கு, அடித்துத்தள்ளு.
Beplaster
v. கனமாக அப்பு, திண்ணமாகப் பூசு.
Beplumed
a. இறகுகளால் கோலம் செய்யப்பட்ட.