English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Benignant
a. அருளுடைய, அன்புடைய, நலம் பயக்கிற.
Benignity
n. அருளுடைமை, அன்புடைப் பண்பு, பண்புடைமை, நோயின் தணிநிலை, வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
Benison
n. வாழ்த்து, கடவுள் ஆசி.
Benjamin
n. கடைசிப்பிள்ளை, செல்லப்பிள்ளை.
Benjamin
-1 n. சாம்பிராணி.
Benjamin
-2 n. பழம்பாணியான புறமேற்சட்டை.
Benjamin-tree
n. சாம்பிராணி மரம், நறுமணப்பட்டையுடைய வட அமெரிக்கப் பூடுவகை, அத்திமர வகை.
Bennet
-1 n. மஞ்சள் நிற மலர்களையுடைய பூண்டு வகை.
Bennet
-2 n. உலர்ந்த புல்தண்டு.
Ben-nut
n. முருங்கை விதையின் பருப்பு.
Ben-oil
n. முருங்கை விதையின் பருப்பு.
Bent
-1 n. கம்பி போன்ற தண்டுடைய நாணபுல்வகை, புல்லினத்தின் விறைத்த மலர்த்தண்டு, உலர்ந்த பழம்புல், களைப்பூடு வகை, புதர், வேலியில்லாத புல்தரை, மலைச்சரிவு.
Bent
-2 n. வளைவு, நௌதவு, கோணல், வளைந்த பாகம், மனப்பாங்கு, மனக்ககோட்டம், விருப்பம், இயற்கை அவா, வில்லை வளைக்கக்கூடிய அளவு, இழுவிசையின் அளவு, பொறுத்திருக்கும் ஆற்றல், (பெ.) வளைவான, கோட்டமுடைய, ஊன்றிய கருத்துள்ள, உறுதிபூண்ட.
Bent(3), n. bend
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Benthamism
n. மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு.
Benthamite
n. மிகப்பெரும்பாலோருக்கு மிகப்பெரிய அளவில் இன்பம் நாடும் அறமுறைக் கோட்பாட்டாளர்.
Benthic
a. கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
Benthos
n. கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.
Benthoscope
n. ஆழ்கடல் உயிர்வாழ்க்கை ஆராய்வுக்குரிய மூழ்கத்தக்க கோளகை.
Bentrovato
a. (இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட, மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.