English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chemotherapeutics, chemotherapy
n. (மரு.) நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்குந் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக்கொண்டு நோய் குணப்படுத்தும் முறை.
Chemotropism
n. (தாவ., வில.) வேதித்திருப்பசைவு, வேதியியல் தூண்டுதலுக்கிணங்க வெவ்வேறு அளவில் வளர்வதனால் திசைத்திருப்பம் ஏற்படுதல்.
Chemurgy
n. உழவுத் தொழில் மூலப்பொருட்களைத் தொழிலுக்குப் பயன்படுத்துவது பற்றிய செயல்முறை வேதியியல் பிரிவு.
Chenille
n. ஆடைகளின் ஓரக்கரை புனையணியாகப் பயன்படும் மென் பட்டிழைக் கச்சை வகை, மென்பட்டு மேசைத் துணி வகை.
Chenopodiaceous
a. (தாவ.) அக்காரக் கிழங்குச் செடியினத்துக்குரிய.
Cheque
n. காசோலை, பணமுறி, உண்டியல்.
Cheque-book
n. காசோலை ஏடு, பணமுறிப் படிவங்களை இதழ்களாகக் கொண்ட ஏடு.
Chequer
n. சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு, சதுரங்க ஆட்டப்பலகை, (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை, பல் வண்ணப்படுத்து, பலவகைப்படுத்து, ஒரு சீரான தன்மையைக் குலை, குறுக்கீடு.
Chequers
n. இங்கிலாந்து முதலமைச்சரின் அலுவலக வீடு.
Chequers
n. pl. பல்வண்ணக் கட்டப்படிவம், சதுரங்கப் பலகைக்குறி.
Chequer-wise
adv. சதுரங்கப் பலகை அமைந்துள்ள வகையாக, மாறி மாறி வெவ்வேறு நிறங்கள் அல்லது தோற்றங்கள் கொண்ட சதுரங்களாக.
Chequer-work
n. வெவ்வேறு நிறங்கள் உள்ள சதுரங்கள் மாறி மாறி வரும் அமைப்புடைய வேலைப்பாடு.
Chequred
a. பல வண்ணமுடைய, பல்வகை வேறுபாடுடைய, சீரமைதிக் குலைவுடைய, மாறி மாறி வரும் இயல்புடைய, இன்பதுன்பம் கலந்த.
Cheralite
n. தோரிய யுரேனியங்களின் வளம் நிரம்பிய கதிரியக்கமுடைய கனிப்பொருள் வகை.
Cherish
v. பேணு, போற்றி வளர், காத்து ஆதரி, சீராட்டு, பாராட்டு, நெஞ்சார நேசி, பற்றுக்கொள், நினைவில் பேணு, மதிப்புக் கொள்.
Cherishment
n. போற்றிப் பேணுதல், சீராட்டு, பாராட்டு, ஊக்குதல்.
Cheroot
-1 n. (த.) சுருட்டு.
Cheroot
-2 n. சாயவேர், சிவப்புச் சாயந்தரும் வேரையுடைய செடிவகை.
Cherry
a. சிறு கொட்டையுடைய சிவந்த கனி வகை, சிவந்த கனிதரும் மரவகை, மரவகையின் கட்டை, (பெ.) கொவ்வைச் சிவப்பான.
Cherry-bean
n. தட்டைப்பயறு.