English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Calculus
-2 n. (கண.) நுண் கணிப்பு முறை, நுண் கணிதம், நுண் கணிதவியல், (தொ.) வகையீட்டு நுண் கணிதம், தொகையீட்டு நுண் கணிதம்.
Caldera
n. (மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய், பேழ்வாய்.
Caledonian
n. பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன், (பெ.) பண்டைய கலிடோ னியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த, (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
Calefacient
n. சூடுண்டாக்கும் பொருள், கொப்புளம், மேலீடான ஊக்கமூட்டும் பொருள், (பெ.) சூடுண்டாக்கத்தக்க.
Calefaction
n. சூடுண்டாக்குதல், சூடுண்டாக்கப்படும் நிலை.
Calefactive
a. சூட்டைத் தருகின்ற.
Calefactor
n. சூடாக்கும் அமைவு.
Calefactory
n. துறவிகள் குளிர் காயும் அறை, கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து.
Calembour
n. (பிர.) சொற்சிலம்பம்.
Calendar
n. ஆண்டுக்குறிப்பேடு, ஆண்டு விவரக் குறிப்பு, 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம், திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல், பட்டியல், (வினை) பட்டியலில் குறி.
Calender
n. (பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர்,
Calender
n. துணிமணிகளுக்குப் பெட்டிபோடும் நீராவிப் பொறி, (வினை) துணி-காகிதம் முதலியவை படிந்து உருவாக்கும் படி உருளை எந்திரத்தில் அழுத்து.
Calendry
n. துணிகாகிதம் முதலியவற்றை மழமழப்பாக்கும் இடம், பெட்டி போடும் இடம்,
Calends
n. pl. ரோமன் ஆண்டின் முதல் மாதம், (தொ.) எப்பொழுதுமில்லை.
Calenture
n. வெப்ப மண்டலக் கப்பற் காய்ச்சல்.
Calescence
n. வெப்ப உயர்வு, சூட்டுப் பெருக்கு.
Calf
-1 n. கன்று, கன்றுக்குட்டி, கன்றின் பதனிட்ட தோல், அறிவற்றன், மூடன், குழந்தை, யானைக்கன்று, மான்கன்று, திமிங்கிலக் குழவி, கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம், ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம், அறிவற்றவன், கருச்சிதைவுறு, மிதியடி செய்
Calf
-2 n. பின்காலின் சதைப்பகுதி.