English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Calligrapher
n. அழகான கையெழுத்தாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர்.
Calligraphic, calligraphical
a. அழகான கையெழுத்தைச் சார்ந்த, அழகான கையெழுத்தாளர்களின் இயல்புள்ள.
Calligraphist
n. எழுத்து வனப்புடையவர்.
Calligraphy
n. கையெழுத்து நேர்த்தி, தனிப் பண்புடைய கையெழுத்துத் திறன்.
Calling
n. அழைத்தல், கூவுதல், வாழ்க்கைத் தொழில், ஒரு தொழிலாளர் கூட்டு, சிறப்பார்வத் தொழில், நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி, இறையருள் கொண்டு, தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை, (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Calliope
n. காப்பியக் கலைத்தெய்வம், நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி.
Calliper
a. திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய, விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய, (வினை.) திட்பமானியால் அள, விட்டமானியால் அள, (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Calliper-compasses, callipers
திட்பமானி, வட்ட உருளைப் பிழம்புகளின் விட்டங்களையும் பொருள்களின் திட்பங்களையும் நுண்ணிதாக அளக்க உதவும் பற்றுக்கைகளையுடைய அளவுக் கருவி.
Calliper-square
n. விட்டமானி, பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
Callipygean, callipygous
a. அழகிய பிட்டத்தையுடைய.
Callisthenic
a. வலிமையும் அழகும் ஒருங்கே அளிக்கத்தக்க உடற்பயிற்சி பற்றிய.
Callisthenics
n. கட்டழகுக் கலை, வலிமையையும் அழகையும் பேணி வளர்க்கும் உடற்பயிற்சிகள்.
Call-loan, all-money
கேட்டவுடன் கொடுக்க வேண்டிய கடன்.
Callnote
n. அகவலிசை, பறவை அல்லது விலங்கு தன்னினத்தை அழைக்கும் ஒலிக்குறிப்பு.
Callosity
n. தோல் தடிப்பு, உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை, சொரணயின்மை.
Callow
n. ஆற்றுவண்டலுள்ள சமநிலம், (பெ.) வௌளத்தில் மூழ்கத்தக்க நிலையில் தாழ்வான, இறகு முளைக்காத, தாடியில்லாத, தேராத, அநுபவமற்ற.
Call-up
n. வரவழைப்பு, கொண்டு வருகை, முன்னிலைப்படுத்துகை, நினைவுக்குக் கொண்டு வருதல்.
Callus
n. தோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
Calm
n. அசைவின்மை, தௌதவமைதி, (பெ.) அமைதியான, ஓசையற்ற, அசையாத, காற்றலைவற்ற, (வினை.) அமைதிப்படுத்து, கொந்தளிப்பைத் தணியவை, ஓய்வுறு, அமைதிப்படு, (தொ.) காற்றில்லா நிலை.
Calmant, calmative
(மரு.) அமைதியூட்டும் பொருள், நோவாற்றும் மருந்து, (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற, நோவாற்றுகிற, அமைதிப்படுகிற*,