English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Calmness
n. அமைதி, முழுஓய்வுநிலை, சாந்தம்.
Calms. N. pl.
(நில.) கடலின் அமைதிநிலை, காற்றின் ஓய்வுநிலை.
Calomel
n. (வேதி.) பூரம், இரசகப் பசகை.
Calorescence
n. வெப்பக் கதிர்கள் ஔதக்கதிர்களாக மாறுபடுதல்.
Caloric
n. முற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம்.
Caloric-engine
n. சூடான காற்றினால் இயங்கும் இயந்திரம்.
Calorie
n. வெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
Calorific
a. சூடு உண்டுபண்ணுகிற, சூடாக்குகிற, (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
Calorification
n. சூடு உண்டுபண்ணுதல், உயிர்வெம்மை, உயிரினத்தின் உடலில் உண்டாக்கப்படும் வெப்பம்.
Calorimeter
n. கனல்மானி, சூட்டின் அளவு காட்டும் கருவி.
Calorist
n. சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர்.
Calotte
n. ரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி.
Calotype
n. பழங்கால நிழற்பட முறை.
Caloyer
n. கிரேக்கத் துறவி மடத்தினர்.
Calp
n. அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
Caltrop
n. கப்பணம், குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து, விண்மீண் உரு முட்செடி வகை, விண்மீண் உருவக் கடற்பாசி, விண்மீண் வடிவக் காயுடைய செடி.
Calumet
n. நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய், அமைதிச் சின்னம்.
Calumniate
v. பழி, இழித்துக்கூறு, பொற்குற்றம் கற்பி, பொய்ச் செய்திகளைப் பரப்பு.
Calumniator
n. தூறு பேசுபவர்.