English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Calyptrogen
n. வேர்மூடியை உருவாக்கும் உயிர்மத்தொகுதி.
Calyx
n. (தாவ.) புல்லிவட்டம், புறவிதழ் வட்டம், (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு, குஹ்ளை அமைப்பு வகை, பவளத்தின் குழிவு.
Cam
n. இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு.
Cam,bric
நயமான வெண்ணிற இழைத்துணி வகை, கைக்குட்டைகள், (பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற.
Cam,era-lucida
n. உருப்பதிவு பெட்டி, பளிங்குப் பட்டை மூலம் பொருளின் உருசாயல் தாள் அல்லது திரைத்துணி மீது விழச்செய்யும் வரைபடத் துணைக்கருவி.
Camaieu
n. உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி, ஒருவண்ண ஓவியம், இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம், கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
Caman
n. முறையமையாச் சிறுவர் வளைகோட் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோல்.
Camaraderie
n. (பிர.) தோழமையுணர்ச்சி, உழுவலன்பு, கெழுதகைமை.
Camarilla
n. (ஸ்பா.) சூழ்ச்சிக் குழு, உட்குழு, மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு, சிறு அறை.
Camaron
n. பெரிய நன்னீர் மீன்வகை.
Camber
n. மெல் வளைவான சிறு கோட்டம், மேல் வாட்டமான வளைவு, கப்பற் பலகையின் மேற்வளைவு, மஜ்ம் இறக்கும் துறை, (வி.) சிறிது வளைவுச்செய், சற்றே வளைவுறு.
Camberwell Beauty
n. அழகிய வண்ணத்துப்பூச்சி வகை.
Cambial
a. மர இனத்தின் வளர்ப்படையைச் சார்ந்த, ஆக்குபடைக்குரிய.
Cambiform
a. ஆக்குபடை வடிவான, வளர்படை உருவான.
Cambist
n. நாணயமாற்றுத்துறை வல்லுநர்.
Cambium
n. (தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
Camboge
n. மஞ்சள் பிசின் அரக்கு வகை.
Cambrel
n. இறைச்சிக்கொளுவி.
Cambrian
n. வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர், (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு, (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய, (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
Cambridge blue
n. இள நீல வண்ணம்.