English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cami-knickers
n. pl. மகளிர் உள் உடுக்கை.
Camion
n. பெரும்பாரப் பொறி வண்டி, பொதி வண்டி.
Camisole
n. கை வைத்தோ வைக்காமலோ தைத்துள்ள பெண்டிர் உள் ஆடை, மகளிர் காலை ஆடை.
Camkerous
a. புற்றுநோய் போன்ற அரித்து அழிவுசெய்கிற, அரித்துத் தின்னுகிற, பழிகேடான.
Camlet
n. ஒட்டக மயிர் ஆடை வகை, கம்பளி ஆடை வகை.
Cammock
n. (தாவ.) மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட செடிவகை.
Camomile
n. செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை.
Camorra
n. (இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு, இரகசியச் சங்கம்.
Camouflage
n. உரு மறைப்பு, ஏமாற்று கருவி, ஏமாற்று வித்தை, (வி.) ஏமாற்று, மாற்றுரு கொள்.
Camouflet
n. (பிர.) வெடிகுண்டு விளைத்த அடித்தள விடர், எதிரிகளின் சுரங்க வழிகளைத் தகர்க்கும் சுரங்க வெடி.
Camp
-1 n. பாசறை, கூடாரம், தங்கல் மனைகள், கூடாரவாசிகள், வழிப்போக்கர் இராணுவத்தார் முதலியோர் இடைவழித் தடங்கல், அரணுடைய பழைய இடம், இராணுவத்தினர் நிலையாகத் தங்குமிடம், சுரங்க வேலை செய்யும் இடங்களிலுள்ளது போன்ற காளான் நகரங்கள், திடீரெனத் தோன்றி வளரும் நகரங்கள், இர
Camp
-2 n. உதைபந்தாட்டத்தின் பழைய முறை, (வி.) சண்டையிடு, போராடு.
Campagna
n. இத்தாலிய சமவௌத.
Campaign
n. களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம், நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல், போராட்ட ஈடுபாடு, வினையாள் முறை, (வி.) போர் வினையில் ஈடுபடு.
Campaigner
n. பல போர் எழுச்சிகளில் பணியாற்றியவர், போரனுபவம் உடையவர்.
Campana
n. மணிபோன்ற வடிவுள்ள பொருள், மலர் வகை.
Campaniform
a. மணி வடிவான, மணிபோன்ற அமைப்புள்ள.
Campanile
n. மணிக்கூண்டு, தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு.
Campanist
n. ஒலிக்கும் மணியாளர்.