English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Came
-1 n. பின்னால் கம்பிப் பலகணியில் வழங்கும் தொடுகுழிவுடைய ஈயப்பாளம்
Came(2), v. Come
என்பதன் இறந்த காலம்.
Camel
n. ஒட்டகம், ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு, கூனல் வானுர்தி, (விவி.)நம்ப முடியாதது.
Camel;s-hair
n. தூரிகையாகப் பயன்படும் ஒட்டக மயிர், அணிலின் வால் மயிர், (பெ.) ஒட்டக மயிரால் செய்யப்பட்ட.
Camel-back
a. சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
Camel-backed
a. கூனல் முதுகுடைய.
Cameleer
n. ஒட்டகம் ஓட்டுபவர்.
Cameline
n. ஒட்டக மயிர் ஆடை, கம்பள ஆடை,
Camelish
a. ஒட்டகம் போன்ற, பிடிவாதமுடைய.
Camellia
n. கீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை.
Camelopard
n. ஒட்டகச் சிவிங்கி.
Camembert
n. பிரான்சு நாட்டிலுள்ள நார்மண்டிப் பகுதிக்குரிய மென்மையான ஊட்டம் மிக்க உறைபாற்கட்டி.
Cameo
n. புடை வண்ணச் செதுக்குமணி, புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி, உள் வண்ணம் வேற்றுப்பிண்ணனி வண்ணமாக அமையும்படி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி.
Cameo ware
n. மறைவறை, வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை, நடுவரின் தனி அறை, நிழற்படக்கருவி, சட்டமன்றம், போப்பாண்டவரின் கருவூலம், தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Camera-man
n. நிழற்படம் எடுப்பவர், பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர்.
Camera-obscura
n. வௌதப்புற உருவைத் திரையில் விழவைக்கும் இருட்டறைப் பெட்டி.
Cameration
n. கவிகை மோட்டமைவு, கவிகை மோட்டமைத்தல்.
Camerlengo, camerlingo
n. போப்பாண்டவரின் பொருளகர், போப்பாண்டவர் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர்.
Cameronian
n. ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர், குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர், (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.