English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Clink
-2 v. பற்றிப்பிடி, ஆணியை மடக்கி அடித்து இறுக்கு.
Clinker
-2 n. போற்றத்தக்க ஒன்று, இனத்திற் சிறந்தது.
Clinker
-1 n. 'கண்கண்' என்று ஒலிப்பது, கடும்பதமான செங்கல், கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல், சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி, கொல்லுலைச் சாம்பற் கட்டி, எரிமலைக் குழம்பின் கரிய ஓடு, பெ
Clinker-built
a. (கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான.
Clink-stone
n. 'கண்கண்' என்று ஒலிக்கும் பாறை வகை.
Clinochlore
n. பச்சை நிறக் கனிப்பொருள் வகை.
Clinometer
n. தளச்சாய்வுமானி, சாய்வு அளக்கும் கருவி.
Clio
-1 n. கிரேக்க புராண மரபில் வரலாற்றுக்கலைத் தெய்வம்.
Clio
-2 n. சிறகுபோல் விரிந்த சினைகளால் நீந்துகிற ஓடில்லாத நீர்வாழ் இப்பி வகை.
Clip
-1 n. கத்தரிப்பு, கத்தரியால் வெட்டுதல், கத்திரித்த துண்டு, கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு, உறைக்கும் அடி, சாட்டை வீச்சு, (வி.) கத்தரி, கத்தரியால் வெட்டு, துண்டுபடுத்து, மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய், பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச
Clip
-2 n. பற்றுகருவி, பிடிப்பு ஊக்கு, ஆடைமீது செருகி வைக்கும் இணைப்பு ஊக்கு, வெடிமருந்துக் கலங்களின் தொகுதி, (வி.) சூழ், பற்று.
Clip-hook
n. இடுக்கி இணைகொக்கி.
Clipper
n. வெட்டுபவர், கத்தரிப்பவர், கத்தரிக்கும் கருவி, விரைந்தியங்குவது, விரைபரி, வேகக்கப்பல், மாகடல் கடக்கும் விரைவு விமானம், முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
Clipping
n. வெட்டல், நுனி கத்தரித்தல், நாணய விளிம்பு வெட்டு, வெட்டப்பட்ட துண்டு, பத்திரிகைத் துணுக்கு, (பெ.) மிகச் சிறந்த, மிகவிரைவாகச் செல்கிற.
Clique
n. தனிக்குழு, சிறு குழு, கும்பு, தன்னலக்குழு, குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.
Cliquish
a. தன்னலக்குழுவைச் சார்ந்த, குறுகிய குழு நல மனப்பான்மையுள்ள.
Cliquism
n. சிறுகுழு அமைக்கும் போக்கு, உட்குழுவம், தன்னலக்குழுவின் சார்பு.
Clitellar
a. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளையம் சார்ந்த.
Clitellum
n. புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு.
Clitoris
n. மகளிர் கந்து.