English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Climate
n. தட்பவெட்பநிலை, காலப்போக்கு, சமுதாயச் சூழ்நிலை அமைதி, காலச் சூழ்நிலை அமைதி, பண்பமைதி.
Climatography
n. தட்பவெட்ப நிலைகளின் விரிவு விளக்கம்.
Climatology
n. தட்பவெப்ப நிலைநுல், தட்பவெப்பநிலையின் காரணகாரியத் தொடர்புபற்றிய ஆராய்ச்சித்துறை.
Climax
n. ஏறணி, உணர்ச்சி ஏற்றம், நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம், உணர்ச்சி முகடு, (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல், உச்சிக்குக் கொண்டுசெல், படிப்படியாக உயர்ந்துசெல்.
Climb
n. ஏற்றம், ஏறுதல், ஏறும் முயற்சி, ஏறவேண்டிய இடம், (வி.) ஏறு, தவழ்ந்தேறு, தாவியேறு, மீதேறு, மேற்செல், உயர்ந்துசெல்.
Climb on jthe bandwagon
வெற்றி பெறும் கட்சி பக்கமாக நிற்க முயற்சிகொள்.
Climber
n. ஏறுபவர், ஏறிச்செல்பவர், சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர், ஏறிச்செல்வது, தழுவு கொடி, ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Climbing-iron
n. மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு.
Clime
n. (செய்.) நாடு, தேசம், பல்வேறு தட்பவெப்ப நிலையுடைய நிலப்பரப்பு.
Clinamen
n. சாய்வு, மனக்கோட்டம், மனச்சார்பு, இயற்கை விருப்பப்போக்கு.
Clinch
n. விடாப்பிடி, தீர்முடிவு, முடிவுத்தீர்வு, (வி.) ஆணியை அடித்து மல்க்கி இறுக்கு, வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு, வலியுறுத்தி முடிவுசெய், (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டிறுக்கு, குத்துச்சண்டையில் கை ஓங்க முடியாத அளவில் நெருங்கிப்பிடி.
Clincher
n. பற்றிப்பிடிப்பவர், வலியுறுத்துபவர், வலியுறுத்தும் முடிவு, தீர்முடிவு.
Clincher-work
n. கப்பலின் பக்கத்தில் கீழிருந்து ஒன்றன் மீதொன்றான பலகைகளின் மேற்கவிவு அமைவு.
Cling
n. ஒட்டுதல், சார்பு, (வி.) பற்றிக்கொள், விடாது ஒட்டிக்கொள், பற்றி உறுதியாயிரு, கொள்கை கடைப்பிடித்து நில், மரம் உட்கருங்கு.
Clingstone
n. சதை கொட்டியுல்ன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய பழவகை, (பெ.) கொட்டையுடன் சதை உறுதியாக ஒட்டிக்கொள்ளப்பெற்ற.
Clingy
a. ஒட்டிக்கொள்கிற.
Clinic
n. மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை, நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம், படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை, தனி மருத்துவமனை, பண்டுவமனை, வௌதயுதவி மருத்துவ ஊழியர்மனை, படுக்கை சார்ந்த நோயாளி, தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம், குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம், (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
Clinic
மருத்துவகம், மருத்துவ அகம்
Clinical
a. நோய்ப்படுக்கைத் தொடர்புடைய, படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த.
Clink
-1 n. 'கண்கண்' என்ற ஒலி, உலோகம் அல்லது கண்ணாடியில் கொட்டினால் ஏற்படும் ஒலி, (வி.) 'கண்கண்' என்ற ஓசை எழுப்பு, 'கண்கண்' என்ற ஒலியுடன் இயங்கு.