English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cloth-yard
n. இருமுழமுடைய துணிக்கோல் அளவை.
Clotter
v. உறைந்துபோ, கெட்டியாகு, தோய்ந்துபோ.
Clottiness, clotting
உறைதல், தோய்ந்துபோதல், தோய்தல், கெட்டியாகுதல்.
Clou
n. (பிர.) கவர்ச்சிமிக்க மையக்கூறு, உயிர்ச்சுவைக்கூறு, கருப்பொருள் குறிப்பு.
Cloud
n. முகில், பனிப்படலம், ஆவித்திரள், புகைமேகம், நிலையின்றி விரைந்தோடுகிற பொருள், ஆவி, திட்பமற்ற பொருள், புகை, ஔத மங்கலாக்கும் பொருள், கறை, மங்கலான தன்மை, புழுதிப்படலம், திவலைத் தொகுதி, நுண்ணுயிர்த்திரள், பின்விளைவு அறிவிக்கக்கூடிய பொருள், பறவைக்கூட்டம், படைத்திரள், நிழல், கருநிறம், மெல்லிய கம்பளியாலான கழுத்துக்குட்டை, மறைப்பு, திரை, தௌதவற்றநிலை, மனவருத்தமான நிலைமை, துன்பம், ஐயம், சிடுசிடுப்பான அல்லது சோர்வு மிகுந்த தோற்றம், (வி.) வானம் கவி, மூடாக்கிடு, ஔதமறை, இருளடையச்செய், நற்பெயரைக் கெடு, கறைப்படுத்து, களங்கமாக்கு, ஔத மங்கலாக்கு, இருளாகு, மங்கலாகு, தௌதவற்ற நிறப் படலங்களால் பலதிறப்படுத்து, துயருறு, சோர்வுறு.
Cloud-build
a. மெய்ந்நிலையற்ற.
Cloud-burst
n. கடுமையான இடிமின்னல் மழை, சிறுபகுதி மீது பெய்யும் பெருமழை.
Cloud-capped
a. முகில் சூழ்ந்த உச்சியை உடைய.
Cloud-catle
n. பகற்கனவு, மனக்கோட்டை, ஆர்வக் கற்பனை நாடு.
Cloud-chamber
n. உறை ஆவி நீர்த்திவலைகளின் வாயிலாக மின்துகளின் நிலையும் போக்கும் தெரிவிக்கும் அமைவு.
Cloud-compeller
n. முகிலை ஆளும் தெய்வம், ஜியூஸ் என்ற கிரேக்கப் பெருந்தெய்வம்.
Cloud-compelling
a. முகிலை ஆட்கொள்ளுகிற.
Cloud-drift
n. இயங்குநிலையிலுள்ள முகில்.
Clouded
a. மேகங்களால் மூடப்பட்ட, இருளடைந்த, தௌதவில்லாத, மங்கலான, புள்ளிகளால் பலதிறப்படுத்தப்பட்ட.
Clouding
n. மங்கலான தோற்றம், (பெ.) மங்கலாகிக் கொண்டு வருகின்ற.
Cloudless
a. மேகமில்லாத, தௌதவான.
Cloudrack
n. முகில் அடுக்கு.
Cloud-scape
n. முகில் அணி வரிசைக்காட்சி, முகிலணி ஓவியம்.
Cloud-topped
a. முகிலால் மூடப்பட்ட, மேகமளாவிய.