English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Clown
n. நாட்டுப்புறத்தான், காட்டான், பண்பாடற்றவன், கோமாளி, (வி.) கோமாளியாக நடி.
Clownery
n. கோமாளிக்கூத்து.
Clownish
a. கோமாளிக்குரிய, கோமாளி போன்ற, கோமாளித்தனமான.
Cloy
v. உவட்டு, நிறைவு காரணமாக வெறுப்பூட்டு, சலிப்பூட்டு, அருவருப்படையச் செய், அளவு மீறி உண், கொம்பினால் குத்து, பீரங்கியை ஆணி அறைந்து செயலற வை, துளையை அடைத்துவிடு.
Cloying, cloysome
தெவிட்டுகிற, தெவிட்டும் தன்மையுள்ள.
Club
n. செண்டு, கைத்தண்டு, குண்டாந்தடி, முனைபருவத்துள்ள குறுந்தடி, குழிப்பந்தாட்ட மட்டை, (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை, கொத்து, ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று, கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு, பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு, தனிக்குழு, கழகம், கூட்டு, கும்பல், கழகமனை, (வி.) தடியாலடி, துப்பாக்கியடியினால் மோது, குறுந்தடியாகப் பயன்படுத்து, ஒருங்கிணை, பொதுநோக்குடன் கூடு, பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு, (படை.) சிதறடி, குழப்பத்துக்குள்ளாக்கு.
Club
மன்றகம், சங்கம், விடுதி, உணவகம்
Clubable, clubbable
பழகுந்தன்மையுள்ள, சமூகப்பாங்குடைய.
Clubbed
a. குறுந்தடியைப்போல் முனைபருத்துள்ள.
Clubbing
n. அடித்தல், ஒன்று கூட்டுதல், பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப்போதல், நோய் நுண்மச் செயலால் முட்டைக் கோசுத் தண்டுகள் வீங்குதல்.
Clubbish
a. கழகங்களில் ஊடாட்டம் மிக்க.
Clubbist
n. கழக உறுப்பினர், கழகத்தொடர்புடையவர்.
Club-face
n. குழிப்பந்தாட்ட மட்டையின் முகப்புத்தோற்றம்.
Club-foot
n. கோணக்கால், தொட்டிக்கால்.
Clubhaul
v. (கப்.) காற்றோட்டத்துக்கு எதிர்ப்புறமாயுள்ள நங்கூரத்தைத் தாழ்த்திக் கப்பலை திசைமாறிச் செலுத்து.
Club-head
n. குழிப்பந்தாட்டக்கோலின் தலைப்பு.
Club-house
n. கழகமனை, கூட்டுப் பொழுதுபோக்கு மனை.
Club-law
n. வல்லவர் ஆட்சிமுறை.