English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Clutches
n. pl. இறுகப்பற்றும் கைகள், கொடும்பிடி.
Clutter
n. ஆரவாரம், இரைச்சல், கம்பலை, கலவரம், அமைதிக்கேடு, குழம்பிய திரள், தாறுமாறான துப்புரவற்ற நிலை, குப்பைக்கூளம், (வி.) ஆரவாரமாகத் திரி, கும்புகூடு, குப்பையாக்கு.
Clydesdale
n. கடுஞ்சுமை இழுக்கவல்ல குதிரை வகை, (பெ.) பெருஞ்சுமை இழுக்கும் குதிரை இனத்துக்குரிய.
Clypeal
a. பூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதிக்குரிய.
Clypeate, clypeiform
a. கேடய வடிவமுள்ள.
Clypeus
n. பூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதி.
Clyster
n. (மரு.) குடல் கழுவு நீர்மம், (வி.) எருவாய்வழி நீர்மம் செலுத்திக் குடல் கழுவு.
Cnida
n. (வில.) இழுது மீன் முதலிய உயிரினங்களின் கொடுக்கு.
Coacervate
a. குவிக்கப்பட்ட, திரட்டப்பட்ட, (வி.) குவி, கூட்டு, சேர்.
Coach
n. தனிவண்டி, மூடுவண்டி, ஆடம்பரவண்டி, வாடகை வண்டி, இருப்பூர்திப் பெட்டி வண்டி, சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி, நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி, கப்பலின் பின்புற அறை, பயிற்சி ஊக்குவிப்பவர், தனிப்பாடங் கற்பிப்பவர், தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர், விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு, (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல், மூடுவண்டியில் ஏறிச்செல், பாடம்கற்பி, பந்தயத்துக்குப் பயிற்சி அளி, தேர்வுக்குப் பயிற்றுவி, ஆசிரியருதவியுடன் படி.
Coach-box
n. பெட்டி வண்டியின் வலவன் பீல்ம்.
Coach-builder
n. பெட்டி வண்டி செய்பவர்.
Coacher
n. பயிற்சி அளிப்பவர், வண்டிக்குதிரை.
Coach-fellow
n. துணைக்குதிரை, வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று, பயிற்சித்தோழன், கூட்டாளி.
Coach-horn
n. பழங்கால அஞ்சல் வண்டி வலவரின் குழலுத்து.
Coaching
n. வண்டியில் ஏறிச்செல்லுதல், பாடங்கற்பித்தல், பயிற்சியளிப்பு.
Coachman
n. வண்டிவலவன், வண்டியோட்டும் பணியாள்.
Coach-office
n. பழங்கால அஞ்சல் வண்டிக்குப் பயணச்சீட்டுக் கொடுக்குமிடம்.
Coach-stand
n. வாடகை வண்டி நிற்குமிடம்.