English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Coachwork
n. உந்து வண்டியின் உடற்பகுதியில் செய்யப்படும் அழகிய வேலைப்பாடு.
Coachy
n. வண்டிவலவன், (பெ.) வண்டிக்குரிய.
Coact
v. கட்டாயப்படுத்து.
Coadjacent
a. ஒட்டணிமையான, அடுத்தூர்கிற.
Coadjutor
n. துணைவர், கூட்டாளி, திருச்சபை மாவட்ட முதல்வரின் உதவியாளர்.
Coadjutress, coadjutrix
n. துணைவி, உதவியாயிருப்பவள்.
Coadunate
a. ஒன்றிய, ஒருங்கிணைந்த, (உட., தாவ.,) பிறப்பிலேயே ஒருங்கிணைந்த, (வி.) ஒன்றுபடு, ஒருங்கிணை.
Coadunative
a. ஒருங்கிணைந்த.
Co-agency
n. ஒருங்கிணை செயலாண்மை.
Coagulam
n. உறையச்செய்யப்பட்ட பொருள்.
Coagulant
n. இறுகி உறையச் செய்யும் பொருள்.
Coagulate
v. கட்டியாகு, உறை, இறுகு, தயிர்போலாகு, குருதிகட்டு, மீளா மாறுதலுறு, உறுதிப்படு.
Coagulation
n. உறைதல், குருதிக்கட்டு.
Coaita
n. சிவந்த முகமுள்ள சிறு தென் அமெரிக்கக் குரங்கு வகை.
Coal
n. கரி, நிலக்கரி, நிலக்கரிப்பாறைத் துணுக்கு, கங்கு, கனல், (வி.) கப்பல் முதலியவைகளில் நிலக்கரியிடு, நிலக்கரி நிரப்பு, பயன்படுத்துவதற்குரிய நிலக்கரியை ஏற்றிக்கொள், நிலக்கரியாக்கு, சுருக்கு.
Coalball
n. நிலக்கரியில் காணப்படும் சுண்ணமடங்கிய கணு.
Coal-bed
n. நிலக்கரி அடுக்கு.
Coal-black
a. நிலக்கரிபோல் கறுப்பான, மிகு கறுப்பான.
Coal-brass
n. நிலக்கரியோடு காணப்படும் இரும்புக் கந்தகக்கல்.