English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Coapt
v. பொருந்தவை, இணக்கு, சரிபடுத்திக்கொள்.
Coarctate
a. அழுத்தப்பட்ட, இறுக்கப்பட்ட.
Coarse
a. கரடுமுரடான, சொரசொரப்பான, இழிந்த, முரட்டுத்தனமான, நாகரிகன்ற்ற, சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த, கொச்சையான, பண்பு நயமற்ற, செப்பமற்ற, உருநயமற்ற, பருவெட்டான, பருங்கூறுகளாலான.
Coarse-grained
a. பருவெட்டான, பண்பு நயமற்ற, முரட்டுத்தனமான.
Coarsen
v. சொரசொரப்பாக்கு, சொரசொரப்பாகு, கீழ்த்தரமாக்கு, இழிவுறு.
Coast
n. கடற்கரை, கரை ஓரம், கீழ்நோக்கிச் சறுக்கிச் செல்வதற்குத் தகுதியான குன்று, மலையில் கீழ்நோக்கிச் சறுக்கிச் செல்லுதல், (வி.) கரை ஓரமாகக் கப்பலில் செல், கடற்கரையையொட்டிக் கப்பல் செலுத்து, ஒரேகரையில் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய், சறுக்கு வண்டியிலேறி மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்கு, மிதிவண்டியை மிதித்தியக்காமலேயே மலையிலிருந்து கீழ்நோக்கிச் செலுத்து, இயந்திரம் இயக்காமலே உந்து வண்டியை மலையிலிருந்து கீழ்நோக்கிச் செலுத்து.
Coastal
a. கடற்கரையோரம் சார்ந்த.
Coaster
n. கரையோரமாகச் செல்லும் கப்பல், மிதிவண்டியின் முன் சக்கரக் கால்மிதியிடம், மேசைமேல் பெரிய சாராயப்புட்டி முதலியவை வைப்பதற்கான வௌளித்தட்டு.
Coastguard
n. கரையோரக் காவல் படை, கரைகாவற் படைஞன்.
Coast-guardman, coast-guardsman
n. கரைகாவற் படைஞன்.
Coasting
n. கரையோரக் கப்பல் செலவு, கரையோரக் கடல் வாணிகம், வலிந்து பழகுதல், மேற்சென்று காதலித்தல், காதல் ஊடாட்டம், மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்குதல், (பெ.) கரையையொட்டிச் செல்கிற, ஒரே நாட்டின் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய்கிற.
Coast-line
n. கரையோரம், கரையோர எல்லை, கரையோர எல்லைக்கோடு.
Coastwaiter
n. கரையோரக் கப்பல் வாணிகம் சார்ந்த சுங்கத்துறை அலுவலர்.
Coast-ward
-1 a. கரைநாடிய, கரையின் திசையிலுள்ள.
Coastward(2), coastwards
adv. கடற்கரையை நோக்கி.
Coastwise
a. கரைவழியாகச் செல்கிற, (வினையடை) கரை நெடுக.
Coat
n. உடுப்பு, மேற்சட்டை, கைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டை, மேல் உடுப்பு, தடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டை, மகளிர் மேலங்கி, மேலுறை, மேற்போர்வை, மூடியிருப்பது, மேல்தோல், தோடு, விலங்குகளின் மயிர், புறத்தோல், சாயத் தோய்வு, கட்டியத்துறையில் மரபுரிமை, (வி.) உடுப்பு அணி, போர்த்து, அணி, உடு, வண்ணப்பூச்சுத் தோய்வி.
Coat-armour
n. (கட்.) மரபு வழிப் படைக்கலச் சின்னங்கள்.
Coatee
n. பின்புற அடிப்பகுதி குறுகலாயுள்ள இறுக்கமான மேற்சட்டை.
Coat-frock
n. மேற்சட்டை அல்லது கக்சு இன்றிப் பயன்படுத்துதற்குரிய உடுப்பு.