English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Coat-hanger
n. சட்டைமாட்டி, மேற்சட்டையை மடிப்புக் கெடாமல் மாட்டி வைக்கப் பயன்படும் கொக்கியுடைய வளைகொம்பு.
Coati, coati-mondi, coati-cundi
n. புனுகுப் பூனை போன்ற புலாண்ணும் அமெரிக்க விலங்குவகை.
Coating
n. வண்ணப்பூச்சு, மேற்படலம், மேற்சட்டை தைப்பதற்கான துணி.
Coat-style
a. உட்சட்டை வகையில் மார்ப்புற நெடுகிலும் குமிழ் மாட்டிகளையுடைய.
Coax
n. இச்சகம் பேசுபவர், (வி.) நயந்து பேசி இணங்கச் செய், முகமின் கூறித் தூண்டு, சீராட்டு, மயங்கிச் சிக்கவை.
Coaxal, coaxial
பொது ஊடச்சுடைய, பொது இருசுடைய, (கண.) பொது ஆயமுடைய.
Cob
-1 n. அன்னச் சேவல், குறுங்காலுடைய பலமிக்க குதிரை, பெரிய மரக்கொட்டை வகை, உருண்டையான நிலக்கரித் துண்டு, உருண்டைத்தலைப்புடைய சூட்டப்ப வகை, உருண்டை வடிவுடைய பொருள், சோளக்கதிரில் மையக் காம்பு முனை, மீன் வகையின் தலை, (பே-வ.) பெரிய மனிதர்.
Cob
-2 n. வைக்களி, சுவர் எழுப்புதற்குப் பயன்படுத்தும் களிமண்-சரளை-வைக்கோல் கலவை வகை.
Cob
-3 n. விதை விதைப்பவர்கள் பயன்படுத்தும் பிரப்பங்கூடை.
Cob
-4 v. பிட்டத்தின்மேல் தட்டு, அடி, மொத்து.
Cobalt
n. வெண்ணிற உலோக வகை, அணு எண் 2ஹ் உடைய தனிம வகை, உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt-blue
n. வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள், (பெ.) நீலநிறமுள்ள.
Cobaltic, cobaltiferous
a. வெண்ணிற உலோக வகை சார்ந்த, வெண்ணிற உலோக வகை உட்கொண்ட.
Cobble
-1 n. உருளைக்கல், தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல், உருண்டையான நிலக்கரித்துண்டு, (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு.
Cobble
-2 v. ஒட்டுப்போடு, அரைகுறையாகப் பொருந்தவை, பருவெட்டாகச் செப்பனிடு, செருப்புப் பழுதுபார்.
Cobbler
n. செம்மான், செருப்புச் செப்பனிடுபவர், திருத்தமற்ற வேலையாள், அரைகுறையாக வேலை செய்பவர், இன்தேறல்-சர்க்கரை முதலியவை கலந்து வைக்கோல் குழலினால் உறிஞ்சப்படும் மது வகை.
Cobbles
n. pl. ஒரே அளவுள்ள நிலக்கரி உருண்டைகள்.
Cobble-stone
n. தளம்பாவுவதற்குரிய உருளைக்கல்.
Cobby
a. மட்டக்குதிரை போன்ற, தடித்த, செறிவான, துடுக்கான, கிளர்ச்சிகரமான.
Cobdenism
n. தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.