English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cochin, cochin-china
n. வளர்ப்புக்கோழியினத்தின் வகை, (பெ.) வளர்ப்புக்கோழியினத்தின் வகை சார்ந்த.
Cochineal
n. தம்பலப்பூச்சி, இந்திரகோபம், உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை, உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Cochlea
n. சுருள் வடிவப்பொருள், நத்தைத்தோடு, வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை, வளைந்து ஏறும் படிக்கட்டு, (உள்.) செவியின் சுருள்வளை.
Cochlear
n. கரண்டி, (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த.
Cochleate, cochleated
a. சுருளாக முறுக்கப்பட்ட, கரண்டி போன்ற.
Cock
-1 n. பறவைச் சேவல், சேவற்கோழி, சேவல் கூவும் நேரம், வைகறை, காற்றுநிலை காட்டி, தன்முனைப்புள்ளவர், இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர், விறைப்பான பொருள், குழாய், குழாய்முனை, துப்பாக்கிக் குதிரை, மேல்நோக்கிய வளைவு, மேல்நோக்கிய தொப்பி ஓரம், துலாக்கோல் முள், மூக்கின
Cock
-2 n. வைக்கோல் போர், சாணம் முதலியவற்றின் சிறு குவியல், (வி.) வைக்கோல் சாணக்கூளம் குவி.
Cockabondy
n. தூண்டிற்புழு வகை.
Cockade
n. தொப்பிமீது சின்னமாக அணியப்படும் சூட்டு.
Cock-a-doodle, cock-a-doodle-doo
n. சேவலின் கூவல், குழந்தை வழக்கில் சேவல், (வி.) கூவு.
Cock-a-hoop
a. பெருமித உணர்ச்சியுள்ள, (வினையடை) பெருமிதமாக, வீம்புடன், வீறாப்புடன் கூவிக்கொண்டு.
Cockaigne
n. போகமும் களிப்பும் நிறைந்த கற்பனை உலகம், கற்பனைப் பொன்னாடு.
Cockalorum
n. தன்முனைப்புள்ள வாலிபன், பச்சைக் குதிரைபோன்ற பிள்ளைகளின் விளையாட்டுவகை.
Cock-and-bull
a. பொருந்தாப் புனைவான, நம்ப முடியாத.
Cockateel, cockatiel
சிறு சூட்டுடைய ஆஸ்திரேலிய நாட்டுக் கிளி.
Cockatoo
n. பெரிய சூட்டுடைய ஆஸ்திரேலிய நாட்டுக் கிளி, சிறு குடியானவன்.
Cockatrice
n. நச்சுக்கண் பாம்பு, திட்டிவிடம், (கட்.) பறவை நாகத்தின் வாலுடைய சேவல்போன்ற அச்சந்தரும் விலங்குருவம்.
Cockboat
n. கப்பலைச்சேர்ந்த சிறு படகு, உறுதியான கட்டமைப்பில்லாத சிறு படகு.
Cocked
a. நிமிர்த்தி வைக்கப்பட்ட, மேல்நோக்கி அல்லது ஒருபக்கம் வளைத்து வைக்கப்பட்ட, குவியல்களாகக் குவிக்கப்பட்ட.
Cocker
n. முற்காலக் கணக்காசிரியர் பெயர்.