English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Club-line
n. பத்தியின் முடிவிலுள்ள குறுகிய கோடு.
Club-man
n. தண்டேந்தி, குறுந்தடி வைத்திருப்பவர், கழக உறுப்பினர், கழகங்களுக்கு அடிக்கடி போகிறவர், நகர வாழ்வுப் பழக்கமுடையவர்.
Club-master
n. கழகநடைமுறை மேலாளர், கழகத்திற்கான தட்டுமுட்டுப் பொருள்கள் சேகரிப்பவர்.
Cluck
n. அடைகாக்கும் கோழியின் கொக்கரிப்பு, பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அழைக்கும்போது மிடற்றினின்றும் எழுப்பிம் ஒலி.
Clue
n. மறைசெய்தியை விளக்கும் குறிப்பு, மறைதிறவு, வழிகாட்டும் குறிப்பு, தடம், கதைத் தொடர்பு, எண்ணத் தொடர்பு.
Clueless
a. தடம் அற்ற, துணைக்குறிப்பற்ற.
Clumber
n. வேட்டை நாய் வகை.
Clump
n. மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு, கும்பு, கொத்து, கட்டி, செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல், பலத்த அடி, (வி.) நிலம் அதிர நட, ஒன்றாகக்குவி, கெட்டியாகு, கும்பில்வை, அடி.
Clumps
n. வினாவிடை விளையாட்டு வகை.
Clump-sole
n. செருப்பில் ஆணியடித்துச் சேர்க்கப்படும் திண்ணிதான அடித்தோல்.
Clumpy
a. உருவமற்ற, கட்டிகள் நிறைந்த, மொத்தையான, பளுவான.
Clumsy
a. அருவருப்பான, உருவமற்ற, ஏடாகோடமான, அலங்கோலமான, அமைப்புக்கேடான, செயல் நயமற்ற, திறமை நயமில்லாத.
Clunch
n. உறுதிவாய்ந்த களிமண், உட்செதுக்கு வேலைக்குப் பயன்படும் வெண் சுண்ணக்கல் வகை.
Clung, v. cling
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Clupeoid
n. கடல்வாழ் மீன் வகை.
Cluster
n. கொத்து, குலை, கூட்டம், தொகுதி, (வி.) கொத்தாகச் செய், கொத்தாகத் திரள், கொத்தாக வளர், கொத்துகளால் நிரப்பு.
Cluster-cup
n. காளான் குடை வகை.
Clustered
a. இனமாகச் சேர்க்கப்பட்ட, திரண்ட, கொத்தான.
Clutch
-1 n. இறுக்கமான பிடிப்பு, இரக்கமற்றபிடி, வளைந்த கூர்நகம், சட்டெனப் பறித்தல், பாரந்தூக்கியின் பற்று உறுப்பு, (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு, (வி.) ஆவலுடன் பற்று, இறுகப்பிடி, பற்றிப்பிடுங்கு, பற்றிக் கௌவு, சட்டெனப் பறிப்பது
Clutch
-2 n. ஓரீட்டுமுட்டைகளின் தொகுதி, ஓரீட்டுக்குஞ்சுகளின் தொகுதி.