English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Canalize
v. கால்வாய் வெட்டு, கால்வாயாக மாற்று, வரையறுக்கப்பட்ட வழியில் செலுத்து, நெறிப்படுத்து.
Canape
n. (பிர.) உப்பிட்ட மீன்முட்டைத் தொகுதியோடு பொரிக்கப்பட்ட சிற்றுண்டி வகை.
Canard
n. (பிர.) புரளி, பொய்யாகப் பரவவிடப்படும் செய்தி.
Canary
n. இனிப்புடைய இளந் தேயல் வகை, மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை, கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை, தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை, (பெ.) கானரித் தீவுகளுக்குரிய, பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள, (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு, இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Canary-creeper
n. கேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை.
Canary-seed
n. பாடும் புள்ளின் உணவாகப் பயன்படும் புல்விதை.
Canasta
n. தென் அமெரிக்காவில் தொடங்கிய சீட்டாட்ட வகை.
Canaster
n. நடு அமெரிக்கப் புகையிலை வகை.
Cancan
n. (பிர.) பிரஞ்சுக்கூத்து வகை, ஊர்த்துவ நடன வகை.
Cancel
n. எதிராணை, அச்சடித்த தாளை வௌதவிடாதடக்குதல், அச்சிட்டதாளை வௌதவிடாதடக்கி வேறாக அச்சிட்டபடி, (வி.) துடைத்தழி, இல்லாதாக்கு, நீக்கு, நடைமுறையிலிருந்து விலக்கு, கோடிட்டு அழி, கீறித்தள்ளுபடி செய், சரிக்கட்டு, மறு எதிராணை செய், பின்னத்தில் ஒரே பகுதி தொகுதியிரண்டிலும் ஒரே சினை அடி, சமன் தொடரில் பொதுச்சினை அடி,
Cancellate, cancellated
a. எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய, சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட, பின்னல் வலை போன்ற அமைப்புடைய, எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
Cancellation
n. குறுக்குக் கோடிடுதல், அழித்தல், நீக்கம்,
Cancelli
n. pl. தடுப்புச் சட்டத்தின் பின்னல் கம்பி வலைக்கூறு.
Cancellous
a. எலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய.
Cancer
n. கடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.
Cancer
n. புற்றுநோய், உள்ளிருந்து அரிக்கும் தீமை.
Cancerous
a. புற்றுநோய் போன்ற, புற்றுநோய் கொண்ட.
Cancriform
a. நண்டு வடிவான, புற்றுநோய் போன்ற.