English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Container
n. கொள்கலம், உட்கொண்டிருக்கும் ஏனம், சரக்குகளை வைத்து அனுப்புதற்குரிய கடகம், பொதியுறை, வளி அடக்கிய புட்டில்.
Containment
n. நிலைமை தௌதவு பெறும் வரை எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயம், நேசவுறவு அவாவித தன் வலிமை வளர்த்துக்கொள்ளும் அரசியல் கோட்பாடு நயம்.
Contaminate
a. மாசுபடுத்தப்பட்ட, (வி.) கறைப்படுத்து, தூய்மை கெடு, தொற்று உண்டுபண்ணு, ஒன்றுபட்டுக் கல.
Contamination
n. கறைப்படுத்தல், தூய்மைக் கேடு, ஒன்று சேர்த்தல், கலத்தல்.
Contango
n. அடுத்த கடன் தீர்க்கும் நாள் வரை வாங்கிய சரக்குகளை விற்பவரே வைத்திருப்பதற்குக் கொடுக்கப்படும் தரகு வீழ்ம்.
Contango-day
n. தரகுவீதங்கள் நிச்சயிக்கப்படும் நாள்.
Conte
n. (பிர.) சிறுகதை இலக்கியத்துறை.
Contemn
v. ஏளனமாகக் கருது, மதிப்புக் குறைவாக நடத்து.
Contemplate
v. ஆழ்ந்து நினை, சிந்தனை செய், கவனமாகப் பார், கூர்ந்து ஆராய், கருத்துக்கொள், எண்ணு.
Contemplation
n. ஆழ்ந்து நினைதல், சிந்தனை, கவனமாகப் பார்த்தல், நோக்கீடுபாடு, சிந்தனைக்குரிய பொருள், எண்ணம், ஈடுபடும் கருத்து.
Contemplative
a. சிந்தனை செய்கிற, ஆழ்ந்த ஆராய்ச்சியின் பாற்பட்ட.
Contemporaneous
a. ஒரே காலத்தில் இயல்கின்ற, ஒரே காலத்துக்குரிய, சமகால நிகழ்ச்சியான, (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய.
Contemporary
n. உடன்வாழ்நர், சமகாலத்தவர், உடனியல்வது, ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை, சமகால உடன்வௌதயீட்டு நாளிதழ், (பெ.) சமகாலத்திய, உடனிகழ்வான.
Contemporize
v. மனத்தில் சமகாலத்ததாகச் செய், உடனிகழ்வாகக் கற்பனை செய்.
Contempt
n. அவமதிப்பு, இகழ்ச்சி, புறக்கணிப்பு, ஏளனம், வெறுப்பு.
Contemptible
a. வெறுக்கத்தக்க.
Contemptuous
a. இறுமாப்பான, ஆணவம் பிடித்த, வெறுப்புக்கிடமான, அவமதிப்பான, ஏளனமான.
Contend
v. முயற்சி செய், போராடு, போட்டியிடு, வாதிடு, ஆர்வத்துடன் வற்புறுத்து, போராடி நிலை நிறுத்த முயல்.
Content
n. உட்பொருள், உள்ளடக்கம், கொள்ளப்பட்ட பொருள், கொள்ளும் அளவு.