English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Co-ordinance
n. கூட்டொழுங்கு முறை, கூட்டுக் கட்டளை.
Co-ordinate
n. இனமொத்த பொருள், நேரினப் பொருள், சமவரிசைப்பட்டது, ஒத்த தரமுடையது, (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம், (கண.) ஆயத்தொலை, கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை, (பெ.) இனமொத்த, வகையொத்த, சமவரிசையுடைய, ஒத்த தரமுடைய, நிரைவைப்பமைதி சார்ந்த, நிரற்பாடுடைய, (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய, (வி.) ஓரினப்படுத்து, ஒருதரப்படுத்து, ஒத்திசைவி, இணங்கி ஒரு நிலைப்படுத்து.
Co-ordinative
a. நேரினப்படுத்துகிற, ஒத்திசைவாக்கப்பட்ட, இனப்பொருத்தம் காட்டுகின்ற.
Coot
n. உச்சியில் வெண்சுட்டியும் குறுவாலுமுள்ள வாத்தின் நீர்ப்பறவை வகை.
Cop
n. உச்சி, தலைப்பு, நுற்கும் கதிரில் சுற்றப்பட்ட குவிவடிவ நுற்பந்து.
Copaiba
n. தென்னமெரிக்க மரத்திலிருந்து பெறப்படும் நறுமணப் பிசின் மருந்து வகை.
Copal
n. வெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
Coparcenary
n. கூட்டுமையின் மரபுரிமையில் இணையுரிமையாளர், (பெ.) கூட்டுடைமையின் மரபுரிமையில் இணையுரிமை பெற்ற.
Coparcener
n. கூட்டுடைமையுரிமையின் இன மரபுரிமையாளர்.
Copartner
n. உடன்பங்காளி, உடனொத்த தோழர், உடனொத்துப் பங்கு கொள்பவர்.
Copartnery
n. கூட்டுப்பங்கு நிலை.
Cope
-1 n. மேலுறை, மூடி, குல்லாய், மேற்கட்டி, வில் வளைவு, கவிகை, மதிலின் முகட்டுறுப்பு, முகட்டுக் கவிகை, குருமாரின் தலைமூடியோடு கூடிய நீள் அரைவிட்டமான பின்தோற்றமும் கையற்ற திறந்த முகப்பும் உடைய மேலங்கி, (வி.) மூடியிடு, கவிகையை மேலிட்டணை, மதிலுக்கு முகட்டுத் தள
Cope
-2 v. பண்டமாற்றுச் செய், கொடுத்து வாங்கு.
Cope
-3 v. எதிர்த்துச் சமாளி, முயன்று வெற்றிபெறு, சரி சமநிலையில் செயலாற்று, ஈடு செலுத்து.
Copeck
n. ருசிய நாட்டின் ரூபிள் நாணயத்தில் நுற்றில் ஒரு பகுதி, ருசியச் செப்புக் காசு.
Coper
n. ஆழ்கடல் பரதவருக்குக் கள்ளத்தனமாகக் கடுமையான இன்தேறலை வழங்க உதவும் கப்பல், (வி.) ஆழ்கடல் மீனவருக்குக் கள்ளத்தனமாகக் கடுந்தேறலை வழங்கு.
Copernican
a. புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய, கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Cope-stone
n. மதிலின் முகட்டுக்கல்.
Copier
n. பார்த்துப் பகர்த்தெழுபவர், படி எடுப்பவர், பார்த்துச் செய்பவர், குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்.
Co-pilot
n. உடன்வலவர், கூட்டு வானுர்தி ஓட்டி.