English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Corinthianise
v. ஒழுக்க வரம்பற்று நட.
Cork
n. தக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வௌதப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு.
Corkage
n. தக்கையால் மூடுதல், மூடி திறத்தல், தக்கை திறப்புக்கான கட்டணம்.
Cork-borer
n. தக்கைகளில் துளையிடும் கருவி.
Cork-cambium
n. பட்டையாக்குபடை, மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு.
Cork-carpet
n. தக்கையும் தொய்வகமும் ஆளியெண்ணெயும் கலந்து செய்யப்படும் நிலத்தள விரிப்பு.
Cork-cutter
n. தக்கை வெட்டும் கருவி, தக்கை வெட்டுபவர்.
Corked
a. தக்கையால் அடைக்கப்பட்ட, மதுவகையில் தக்கையால் கறைப்படுத்தப்பட்ட, பழுதாக்கப்பட்ட, தக்கைக் கரியால் கருமையாக்கப்பட்ட.
Corker
n. முடிவுக்குக் கொண்டுவருபவர், முடிவுசெய்வது, தனி மேம்பாடு உடையவர், தனி மேம்பாடு உடையது.
Cork-heel
n. தக்கையாலான புதைமிதியடியின் குதிகால் பகுதி.
Cork-heeled
a. புதைமிதியடி வகையில் தக்கையாலான குதிகால் பகுதியுடைய, வேண்டுமென்ற, அழிவழக்கான.
Corking-pin
n. மிகப்பெரிய ஊசி, முளை.
Cork-jacket
n. தக்கை மேலங்கி, நீந்துவதற்கு உதவியாக உட்புறம் தக்கை வைத்துத் தைக்கப்பட்ட மேல்சட்டை.
Cork-leg
n. செயற்கைக் கால்.
Cork-oak
n. ஸ்பெயின்-போர்ச்சுகல் நாடுகள் வணிகத்திற்கு வேண்டிய தக்கை தரும் மரவகை.
Cork-screw
n. தக்கை திருகி, தக்கைவாங்கி, (பெ.) தக்கைத் திருகி போன்ற உருவுடைய, (வி.) திருகலாக இயங்கு, வலிந்து பிடுங்கு, வலிந்து தகவல் பெறு.
Cork-sole
n. புதைமிதியடியின் தக்கையாலான உள்ளடித்தோல்.
Cork-tree
n. தக்கைமரம், தக்கை மரவகை.
Corkwing
n. ஐரோப்பிய தென் அமெரிக்கக் கரையோரங்களுக்குரிய முள் மீன் வகை.
Corkwood
n. மிக இலேசான கட்டை தரும் மரவகை.