English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Countermark
n. கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு, மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு, ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி, குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
Countermine
n. எதிர்ச் சுரங்கம், முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம், எதிர்ச் சதி, எதிர்ச் செயல் வகை, (வி.) எதிராகச் சுரங்கம் அமை, எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில், எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு.
Counter-motion
n. எதிர் இயக்கம், எதிர்ப்போக்கு, எதிர்ச் செயல்.
Counter-move
n. எதிர்ச்செயல்முறை, எதிர்ப்புத் திட்டம்.
Counter-movement
n. எதிரிடை இயக்கம்.
Countermure
n. பின்னணிக் காப்பரண் மதில், மதிலை வலுப்படுத்தப பின் எழுப்பப்படும் மதில், முற்றுகையாளர் எதிர் மதிலரண்.
Counter-mure
v. பின்னணி மதிலெழுப்பிப் பாதுகாப்புச்செய்.
Counter-offensive
n. எதிர்த்து மேற்சென்று தாக்குதல், எதிர்த்து அரண்புறம் சென்று தாக்குதல்.
Counter-opening
n. எதிர்புறத்தில் அமைந்த புழை வாயில், வேறு இடத்திலுள்ள வாய்வழி.
Counter-pace
n. எதிர்ப்பக்கப் போக்கின் ஒருபடி, எதிரான செயல், எதிர் நடவடிக்கை.
Counter-paled
a. (கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
Counterpane
n. படுக்கை விரிப்பு.
Counter-parole
n. துணையடையாள வாசகம், போர் நிலவரத்திடையே பகை பிரித்தறிய உதவும் அடையாள மொழியுடன் பயன்படுத்தப்படும் துணைமொழி.
Counterpart
n. எதிரிணை, சரி எதிர்ப்பகுதி, சரி நிரப்புக்கூறு, குறை ஈடு செய்யும் கூட்டாளி, மறுபடிவம், சரிநேர் படிவம், சரிநேர் அலுவர்.
Counter-passant
a. (கட்.) எதிர்ப்புறமாக ஒருவரையொருவர் கடந்து செல்கிற.
Counterplea
n. வழக்கில் எதிர்வாதம், எதிர்க்குறையீடு, வேண்டுகோளுக்கு மறு வேண்டுகோள்.
Counterplead
v. எதிர்மாறாக வழக்காடு.
Counterplot
n. எதிர்ச் சதி, எதிர்ச் சூழ்ச்சி, (வி.) சூழ்ச்சி அழிக்க எதிர்ச் சூழ்ச்சி செய், எதிர்ச் சூழ்ச்சி செய்தழி.
Counterpoint
n. (இசை.) பண்ணிசைவுத்திறம், உடன் துணைப்பண்திறம், விதிமுறையான பண்மிசைப் பண்.
Counterpoise
n. சமன்படுத்தும் எதிர் எடை, சரி எதிராற்றல், சரி சமநிலை, சரி ஒப்புநிலை, (வி.) சரி எதிர் எடையிடு, சரிசம ஆற்றலுடன் எதிர்ப்புச் செய், சமநிறையாக்கு, குறைபாடு ஈடு செய், சரி ஒப்பு நிலைக்குக் கொண்டுவா.