English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Counteractive
n. எதிரிடையாகச் செய்வது, மாறு செய்பவர், தடைசெய்பவர், (பெ.) எதிரிடையாகச் செய்யும் இயல்புடைய, மாறு செய்யும் குணமுடைய.
Counter-agent
n. எதிரிடையாகச் செய்யும் ஆற்றலுடைய பொருள், எதிரிடையாக்குபவர்.
Counter-attack
n. எதிர்தாக்குதல், (வி.) தாக்குதலை எதிர்த்துத் தாக்கு, புறம் போந்து தாக்கு.
Counter-attraction
n. எதிர்க்கவர்ச்சி, போட்டியான கவர்ச்சிக்கூறு.
Counterbalance
n. சரிசம எதிர் எடை, சரிசம எதிர் ஆற்றல், (வி.) சரிசம எதிர் எடையிடு, சரிசம வலிமை காட்டு, ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு, சரிஈடு செய்.
Counter-battery
n. (படை.) எதிர்த்தாக்குப் பீரங்கி வரிசை.
Counterblast
n. எதிர் முழக்கம், எதிர்ப் பழிப்பு.
Counterblow
n. எதிரடி, எதிர்த்தாக்கு அதிர்ச்சி.
Counterbond
n. பிணைமுறி இழப்பீட்டு உத்தரவாதச் சீட்டு.
Counter-brace
n. (கப்.) முன்பாய்மர உச்சிப் பற்றிறுக்கி, (வி.) (கப்.) எதிரெதிராக இறுக்கிக் கட்டு.
Counterbuff
n. தடைத்தாக்குதல், இயக்கத்தை நிறுத்தவல்ல தாக்குதல், எதிர்த்தாக்குதல், இயக்கத்தைப் பின்னிடைய வைக்கும் தாக்குதல், எதிரடி, எதிர்த்தாக்கதிர்ச்சி, தோல்வி, (வி.) எதிர்த்தாக்கு செய், தடை செய்.
Counter-ceiling
n. மேல்தள அடுக்குகளுக்கிடையில் வைக்கப்படும் உலர் பொருள்.
Counterchange
v. பரிமாற்றம் செய், தலைமாற்று, குறுக்குக்கட்டமிடு, இடமாற்று, கூறுமாற்று.
Counter-changed
a. பரிமாற்றம் செய்யப்பட்ட, குறுக்குக் கட்டமிடப்பட்ட, வண்ணங்கள் மாற்றப்பட்ட, நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட.
Countercharge
n. எதிர்க் குற்றச்சாட்டு.
Countercharm
n. எதிர் மாயம், எதிர்ச் சூனியம், கவர்ச்சி மாற்று, (வி.) எதிர்மாயம் செய், மாயம் கெடு, எதிர்க் கவர்ச்சி செய், கவர்ச்சி முறி.
Countercheck
n. தடையெதிர்ப்பு, தடுப்பு, எதிரீடு, இடையூறு, தடங்கல், கண்டனம், அதட்டல், (வி.) இடையூறுகளால் தடைசெய், திட்டு, கண்டி, அதட்டு.
Counter-claim
n. எதிர் உரிமைக் கோரிக்கை, எதிர்வழக்கீடு.
Counter-clockwise
a. இடஞ்சுழித்த, (வினையடை) இடஞ்சுழியாக.
Counter-current
n. எதிர் நீரோட்டம், எதிரொழுக்கு, எதிர்ப்பாய்ச்சல்.