English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cotyloid
a. கிண்ணம்போன்ற.
Couch
n. துயிலிடம், படுக்கை, பாயல், சேக்கை, மஞ்சம், ஓய்விருக்கை, சாய்வுக்கட்டில், காட்டு விலங்கின் தூறு, குகை, அடுக்கு, பரப்புவதற்குரிய இடம், தளம், (வி.) கிடத்து, படுக்கவை, பக்கத்துக்குப் பக்கமாகக் கிடக்க விடு, அருகில் வை, கீழிடு, தாழ்த்திப்பிடி, ஏந்து, பதுங்கு, கூனிக்குறுகு, ஔதந்திரு, பதியம்போடு, பரப்பு, நிரப்பு, முளையூறவைத்துப் பரப்பு, உட்பொருள் பொதிய வை, கண்படலககமற்று, படலமகற்றுக் கண்ணைப் பக்குவமாக்கு.
Couchant
a. படுத்துள்ள, படுக்கையான, (கட்.) விலங்குகள் வகையில் தலை தூக்கிப்படுத்துள்ள.
Couesim
n. எமிலி குவே என்பவரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறை, நோயாளி தன் உள்ளார்வ எண்ண அலை எழுப்பும்படி செய்வதன் மூலமே நோய் நீக்க நாடும் முறை.
Cougar, couguar
பெரிய பூனையின் அமெரிக்கக் கொடு விலங்கு வகை.
Cough
n. இருமல், இருமல் நோய், இருமலொலி, (வி.) இருமு.
Cough-drop, cough-lozenge
n. இருமல் தணிக்கும் இனிப்பு மாத்திரை.
Could, v. can
என்பதன் இறந்தகால வடிவம்.
Couleur de rose
n. (பிர.) ரோசா நிறம், (பெ.) ரோசா நிறமான.
Coulisse
n. நாடக அரங்கின் திரைத்தட்டி சறுக்கிச் செல்வதற்குரிய பள்ள வரை வாய்ந்த மரக்கட்டு.
Coulisses
n. pl. நாடக அரங்கப் பக்கச் சிறகம், இரு சிறகங்களின் இடைவௌத.
Couloir
n. (பிர.) செங்குத்தான மலைவிடர், அருவியால் தோண்டப்பட்ட மலைப்பள்ளம்.
Coulomb
n. ஒரு நொடியில் ஒரு மின்னலப்ல் ஈர்க்கப்படும் மின் ஆற்றலலகு.
Coulter
n. ஏர்க்கொழுவின்முன் அமைக்கப்பட்டுள்ள வெட்டிரும்புத் தகடு.
Coumarin
n. செடிகொடி வகைகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப்பொருள் வகை.
Council
n. மன்றம், ஆய்வராய்வுக் கழகம், அறிவுரைக்குழாம், ஆட்சிமுறைப் பேரவை, சட்ட மன்றம், மன்ற உறுப்பினர் குழு, நகரவை, மாவட்ட ஆட்சி மன்றம், திருச்சபைக் கொள்கை நடைமுறை வகுப்புப் பேரவை, சமயச் சீரமைப்புக் குழு, பல்கலைக் கழக ஆட்சிக்குழு, சங்க ஒழுங்கு முறைக்குழு.
Council-board
n. மன்ற மேடை, மன்ற உறுப்பினர் சூழ அமர்வதற்குரிய நடு மேசை.
Council-chamber
n. ஆய்வுமன்றக் கூடம், அவைக்களம்.
Council-house
n. மன்ற மாளிகை, அவைக்கட்டிடம், நகராண்மைக் கழகம் கட்டிய வீடு.
Councillor
n. மன்ற உறுப்பினர்.