English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Councilman
n. நகராட்சிக் கழக உறுப்பினர்.
Council-school
n. நகராட்சிக் கழகம் அல்லது மாவட்ட ஆட்சிக் கழகத்தால் நடத்தப்படும் பள்ளி.
Counsel
n. கலந்தாய்வு, கலந்து பேசுதல், அறிவுரை, கருத்துரை, கட்டளை, திட்டம், நோக்கம், தனி மறைவான செய்தி, வழக்குரைஞர், வழக்குரைஞர் குழு, (வி.) அறிவுரை கூறு, பரிந்துரை நல்கு, எச்சரிக்கை செய்.
Counsellable
a. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய.
Counsellor
n. அறிவுரை கூறுபவர், வழக்குரைஞர்.
Count
-1 n. (வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர், கோமான், உயர் குடிமகன், பெருமகன்.
Count
-2 n. கணக்கீடு, கணிப்பு, தொகைப்படுத்துதல், எண்ணிக்கை, எண்ணிய எண், நுலிழைத் தரக் குறிப்பெண், குத்துச்சண்டையில் விழுந்தவன் எழுந்து போர் தொடர்வதற்கு வரையளவான நொடி நேர எண்ணிக்கை, மதிப்பு, சலுசையளவு, குற்றச்சாட்டின் குற்றக்கணிப்புக் கூறு, வரையளவில்லாமை முன்னிட
Countable
a. கணக்கிடத்தக்க, எண்ணவேண்டிய, எண்ணப்பட்ட, பொறுப்புள்ள, காரணமாகத்தக்க.
Count-down
n. இறங்குமுகக் கணிப்பு, குறித்த நேரச்செயல் நடைமுறையில் செயல் நேரம் இன்மை எண் (0) ஆக வரவரக் குறையும்படி இடைநேரமமைத்தல்.
Counted
a. கணக்கிடப்பட்ட, மதிப்பிடப் பெற்ற, கணிக்கப்பட்ட.
Countenance
n. முகம், முகத்தோற்றம், முகபாவம், முகஅமைதி, விருப்பு வெறுப்புக் குறிப்பு நிலை, உவப்புவர்ப்புத் தோற்றம், இசைவுக் குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, (வி.) ஆதரவு காட்டு, உடன்பாடு தெரிவி.
Counter
எண்ணகம், செயலறை, கல்லா, செலுத்துமிடம்
Counter
-1 n. எண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல்
Counter
-2 n. குதிரையின் தோளுக்கும் கழுத்தடிக்கும் இடைப்பட்ட மார்புப் பகுதி.
Counter
-3 n. (கப்.) நீர்வரைக்கு மேற்பட்ட பின்பக்கத்தின் உள்வாங்கிய பகுதி.
Counter
-4 n. வாட்போரில் கை சுற்றாமல் வாள் சுற்றித் தாக்குதல், சுழற்றுத்தாக்கு.
Counter
-5 n. மிதியடி அல்லது புதைமிதியில் குதிகால் சூழ்ந்த பின்பகுதி.
Counter
-6 n. பனிச்சறுக்காட்டத்தில் உள்வளைவியக்க மாறிப் புறவளைவாகத் திரும்பு முறை.
Counter(y)
n. எதிரிடையானது, மாறானது, (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி, (பெ.) எதிரான, மாறான, முரணான, (வி.) எதிர், மறுதலி, எதிராயிரு, முரணு, சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு, குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு, (வினையடை) எதிர்வழியாக, எதிர்ப்பக்கமாக, எதிர்த் திசையில், எதிர்த்து.
Counteract
v. எதிரிடையாகச் செய், மாறு செய், எதிர்த்துத் தடைசெய், தோல்வியடையச் செய், சமப்படுத்து, மட்டுப்படுத்து, முனைப்பழி.