English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cultured
a. பண்பட்ட, கல்வியால் மேம்பட்ட, நாகரிக நயமுள்ள, மேன்மையாக்கப்பட்ட.
Cultus
n. சமயக் கொள்கை அமைப்பு, கோட்பாடு, வழிபாடு, செயற்கைப் பற்று வெறி.
Culverin
n. (வர.) 1க்ஷ் பவுண்டு குண்டு வெடிக்கும் நீளமான பழைய பீரங்கி வகை, சிறு வெடிகலத் தொகுதி.
Culver-key
n. காட்டுமலர்ச் செடிவகை, தேக்கு இன மரத்தின் இறகுடைய பழவகை.
Culvert
n. பாலம், கால்வாயின் கீழ்ச்செல்லும் மதகு, மின் கம்பி வடத்துக்குரிய நெறி.
Culvertage
n. பண்ணையாளை அடிமையாகும்படி இழிவுபடுத்துதல்.
Cum
prep. உடனாக, கூட, உடன்கலந்து.
Cumber
n. வீண்சுமை, வில்லங்கம், தடை, தொந்தரவு, (வி.) வீண்சுமையாயிரு, குறுக்கிடு, வழியடை, தடங்கலாயிரு, முட்டுக்கட்டை இடு.
Cumbered
a. தடைப்படுத்தப்பட்ட, காற்கட்டுண்ட, வில்லங்கப்பட்ட.
Cumber-ground
n. பயனற்ற பொருள்.
Cumberless
a. தடையில்லாத, இடையூறற்ற, வில்லங்கமற்ற, பளுவில்லாத.
Cumbersome
a. பெரும் பளுவான, இடைஞ்சலான, எளிதில் கையாள முடியாத, வாக்குப்போக்குக் கெட்ட,
Cumbrance
n. வில்லங்கம், தொந்தரவு, சுமை, தடை.
Cumbrous
a. பெருஞ்சுமையான, முட்டுக்கட்டையாயுள்ள, தடைப்படுத்துகின்ற, எளிதில் கையாள முடியாத, இசைவு கெட்ட.
Cummer
n. பெண், சிறுமி, வாயாடி, தோழி, துணைவி.
Cummerbund
n. இடைக்கச்சை, அரைப்பட்டிகை.
Cumquat
n. ஊறுகாய்க்குரிய சிறு கிச்சிலிப்பழ வகை.
Cumshaw
n. நன்கொடை, சிறு கையுறை, சிறு கைக்கூலி.