English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cumulate
a. ஒன்றாகக் குவிக்கப்பட்ட, திரளாகச் சேர்க்கப்பட்ட, (வி.) திரளாகச்சேர், ஒன்றாகக் குவி, அடுக்கு, படிப்படியாகச் சேகரி.
Cumulation
n. ஒன்றுதிரட்டல், குவித்தல், திரட்சி, குவிப்பு.
Cumulative
a. அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற, படிப்படியாகத் திரண்டு வளர்கிற.
Cumulo-stratus
n. திரள் குவியும் படியடுக்கும் கலந்த நிலையிலுள்ள முகிற்படிவம்.
Cumulus
n. ஆப்பு வடிவமுடைய.
Cuneal, cuneate
ஆப்பு வடிவுடைய.
Cuneiform
n. ஹிட்டைட் பாபிலோனிய அசீரிய பாரசீக மக்களின் ஆப்பு வடிவமுள்ள எழுத்துமுறை, (பெ.) எழுத்துக்கள் வகையில் ஆப்பு வடிவமுள்ள.
Cunette
n. அகழியின் நடுவூடான நீர்வாரிக் கால்வாய்.
Cunner
n. அமெரிக்க மீன்வகை.
Cunning
n. சூழ்ச்சி, தந்திரம், வஞ்சகம், திறமை, கைத்திறம், அறிவு, (பெ.) சூழ்ச்சித் திறமுடைய, தந்திரமுடைய, இரண்டகமுடைய, வஞ்சகமான, திறமையுடைய, கைத்திறமிக்க, அறிவார்ந்த.
Cunningness
n. தந்திரமுள்ள தன்மை, சூழ்ச்சி குணம், வஞ்சகக் குணம், சூதுள்ள தன்மை.
Cup
n. குடிகலம், கிண்ணம், குவளை, பரிசுக்கலம், குழிவு, பள்ளம், கிண்ணம் போன்ற அமைவு, குழிவுடைய பகுதி, குவளை நிறை அளவு, கிண்ண நீர்மம், குடிகலத்திலுள்ள பொருள், குடிகலவை, ஊழின் பங்கு, வரற்பாலது, இன்ப அளவு, துன்ப அளவு, (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு, குவளையில் வை, குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை, குழிவாகு.
Cup-and-ball
n. குதைகுழிப் பொருத்து, பிணிப்புற்ற பந்தைக் கழியின் நுனியிலுள்ள குழிவில் பிடிக்கும் விளையாட்டுவகை.
Cup-and-ring
n. பாறைகளில் கிண்ணவடிவைச் சுற்றி வளையங்களாக அமைந்த வரலாற்றுக்கு முற்பட்ட குறி.
Cupbearer
n. விருந்தில் குடிகலம் பரிமாறுபவர்.
Cupboard
n. அடுக்குப்பலகை, அடுக்களைத் தட்டுமுட்டுக்களை வைக்க உதவும் நிலையடுக்கு, (வி.) சேமித்து வை.
Cupboard-faith
n. பொருளியல் நோக்குடைய சமயப்பற்று.
Cupboard-love
n. பொருளியல் நோக்குடைய பற்று.
Cup-coral
n. கிண்ண வடிவமுள்ள பவளம்.
Cupel
n. பொற்கொல்லர் மாற்றுப்பார்க்கப் பயன்படுத்தும் சிறுகலம், புடைபெயர்க்கத் தக்கதாய்ப் புடமிடப் பயன்படுத்தப்படும் எறிகனல் அடுப்பு, (வி.) எறிகனல் அடுப்பு மூலம் மாற்றுப்பார்.