English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cup-tie
n. பரிசுக்கோப்பை ஆட்டம், பரிசுக்கோப்பைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களைத் தீர்மானிப்பதற்கான தொடர் ஆட்டங்களில் ஒன்று.
Cupular, cupulate
கிண்ணம் போன்ற, கிண்ண வடிவக் காய் வகைகளின் உறை சார்ந்த, தனிச் செடியாக வளரும் சிறு இலைமொட்டைச் சார்ந்த.
Cupule
n. (தாவ., வில.) கிண்ண வடிவ உறுப்பு, கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செடிவகையின் இலையில் உள்ள தனிச் செடியாக வளரத்தக்க கிண்ண வடிவ மொட்டு, காய் வகைகளின் கிண்ணம் போன்ற மேலுறை.
Cupuliferous
a. கிண்ண வடிவ மேலுறையையுடைய கனிகளேந்திய மர இனப்பிரிவு சார்ந்த.
Cur
n. கீழின நாய், வெறுக்கத் தகுந்த கயவன், இழிஞன், போக்கிரி.
Curacao, curacoa
கசப்பு ஆரஞ்சுத் தோலினால் மண மூட்டப்பட்ட தேறல்.
Curacy
n. சிற்றுர்த் துணைமைநிலைச் சமயகுரு நிலை, துணை நிலைச் சமயகுருவின் வேலை, துணைநிலைச் சமயகுருவின் மானியம்.
Curara, curare, curari
அரளி போன்ற தென் அமெரிக்க செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் ஊக்க அழிவு செய்யும் நஞ்சு வகை.
Curarine
n. வேர் வகையிலிருந்து எடுத்து அறுவை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன்படுத்தப்படும் கொடிய நச்சு மருந்து.
Curassow
n. வான்கோழி இனப் பறவை.
Curate
n. ஆன்ம மருத்துவர், சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு, அப்பம் வைக்கும் நிலைதாங்கி.
Curative
a. நோய் குணப்படுத்தும் இயல்புடைய, நிவாரணமான.
Curator
n. பொறுப்பாளர், காப்பாளர், மேற்பார்வையாளர், காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர், பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர், சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Curb
n. கடிவாள வார், கடிவாளச் சங்கிலி, அடுப்பில் சாம்பலைத் தடுத்து வைக்கும் முன்தட்டு, தள விளிம்பு வரிசைக்கல், விளிம்புக் கட்டை, ஓரப்பலகை, நடைபாதைக்கடை, தடை, தடைகாப்பு, குதிரைக் கால்காய்ப்பு நோய், கிணற்றுத் தோவளம், மரம் அல்லது இரும்பாலான வட்ட அழி, (வி.) தடு, தடுத்து நிறுத்து, கடிவாளமிடு, கடிவாளமிட்டு இயக்கு.
Curb-roof
n. இருபக்கச் சரிவுகளிலும் மேல்பகுதிச் சாய்வை விடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு.
Curbstone
n. விளிம்பு வரம்புக்கல், தள ஓரங்களைப் பாதுகாக்கும் செங்குத்தான கல்.
Curcuma
n. மஞ்சள், மஞ்சள் செடி.
Curd
n. தயிர், பாலேட்டில் பாலடைக்கட்டிப்பகுதி, தயிரைப் போன்ற பொருள், சவுக்காரத் தொழிலில் காரக் கரைசலில் மிதக்கும் மணிச்சக்கை, மீன்வகையின் தசைச்சுளைகளுக்கிடையிலுள்ள கொழுப்புப் பொருள்.
Curdle
v. தயிராகு, உறை, கெட்டியாகு.
Curdy
a. தயிர் போன்ற, கெட்டியான, தயிர் நிறைந்த.