English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Curling-pond
n. பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டுக்குரிய நீர் நிலை.
Curling-stone
n. பனிப்பரப்பில் நழுவ விட்டு விளையாடுவதற்கான கைப்பிடியுள்ள கனத்த கல்.
Curl-paper
n. முடியைச் சுருட்டுவதற்காக முறுக்கி முடிக்குள் செலுத்தப்பட்ட தாள்.
Curly
a. சுருளுள்ள, சுருள் சுருளான, சுருள் நிறைந்த.
Curly-greens
n. சுருண்ட இலைகளுள்ள கோசுக்கீரை வகை.
Curmudgeon
n. கஞ்சன், கருமி, உலோபி, பேராவற்காரன், சிடுசிடுப்புடையவன்.
Curmurring
n. குமுறல், வயிற்றிரைச்சல், வயிற்றுப்பொருமல்.
Curney, curny
சிறு துணுக்குகளாகவுள்ள, சிறு மணிகளாகவுள்ள.
Currach, curragh
பரிசல், ஓடம், சிறு படகு.
Curragh
n. தரிசான சதுப்பு நிலம்.
Currant
n. விதையற்ற உலர்ந்த கருமுந்திரிப்பழம்.
Currant-bread
n. உலர்ந்த முந்திரிப்பழம் உள்ளீடாய் அமைந்த அப்பம்.
Currant-bun
n. உலர்ந்த முந்திரிப்பழங்கள் நிரம்பச் சேர்க்கப்பட்ட மணமுள்ள கருநிற மெல்லப்ப வகை.
Currant-cake
n. உலர் முந்திரிப்பழங்கள் உள்ளீடாக வைக்கப்பட்ட மென் மாவடை.
Currant-jelly
n. உலர்ந்த சிவப்பு அல்லது கறுப்பு முந்திரிப்பழப் பாகு.
Curranty
a. முந்திரிப்பழங்கள் நிறைந்துள்ள.
Currency
n. நடப்பு நாணயம், செலவாணி, செலவாணியிலுள்ள பணம், செலவாணியிலுள்ள தாள் நாணயம், நடப்பு, நடைமுறைப் போக்கு, சுற்றோட்டம், கருத்து நிலவரத்திலிருத்தல், சொல் வழக்காறுடைமை, செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
Current
n. ஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான.
Current-bedding
n. (மண்.) பொய்ப்படுகை.
Curricle
n. இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி, இரதம், தேர்.