English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Centre-second, centre-seconds
n. கடிகாரத்தின் நொடி காட்டும் மையத் தனிமுள்.
Centric, centrical
மையம் சார்ந்த, நடுவிலுள்ள, மையத்தை உட்கொண்ட, (தாவ.) நீண்டுருண்டு வழவழப்பாயுள்ள.
Centrifugal
n. வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், (பெ.) விரி மையப் போக்குடைய, மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற, (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற, விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற, விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifugalise
v. விரிமையப் போக்குடையதாக்கு.
Centrifugation
n. விரிமைய வளர்ச்சிச் சக்திக்கு உட்படுத்தல்.
Centrifuge
n. வெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.
Centring
n. (க-க.) மேல்வளைவு அல்லது கவிகைமோடு கட்டும் போது பயன்படுத்தப்படும் தற்காலிகமான பொருத்துச்சட்டம்.
Centripetal
a. குவிமையப் போக்குடைய, மையத்தை நோக்கிச் செல்கிற, அடிப்பகுதியிலிருந்து நுனிமுனைக்குப் போகிற.
Centripetalism
n. குவிமைய வளர்ச்சித் தன்மை, மையம் நோக்கிச் செல்லும் இயல்பு.
Centrobaric
a. எடை ஈர்ப்பு மையத் தொடர்புள்ள.
Centroclinal
a. (மண்.) பலதிசைகளிலிருந்து மையம் நோக்கிச் சாய்கின்ற.
Centrode
n. சுற்றதலினால் உடனடியாகத் தோன்றிக் கொண்டுவரும் மைய இடமாற்ற இணைவரை.
Centrosphere
n. (மண்.) நிலவுலகின் மையக் கருவுள்.
Centuion
n. ரோமப் படையில் நுற்றவர் தளபதி, நுறெண்கெலித்தவர்.
Centumvirate
n. நுற்றுவராட்சி.
Centuple
n. நுறு மடங்கு, (பெ.) நுறுமடங்கான, (வி.) நுறு மடங்கு அதிகமாக்கு, நுற்றினால் பெருக்கு.
Centuplicate
n. நுற்றமடிப் படிகளில் ஒன்று, (பெ.) நுறு மடங்கான, (வி.) நுறு மடங்காக்கு.
Centurial
a. நுற்றாண்டுக்குரிய, ரோமப் படைப் பிரிவுக்குரிய.
Century
n. (வர.) நுறு ரோம வீரர்கள் கொண்ட படை வழூப்பு, வாக்களிப்பதற்கான அரசியல் பிரிவு, நுறு கொண்ட எண்ணிக்கை, மரப்பந்தாட்டத்தில் நுறு ஓட்டங்கள், நுறுகால் பயணம், நுற்றாண்டு, முதன்மையான ஒரு நிகழ்ச்சியிலிருந்து-சிறப்பாக இயேசுநாதர் பிறந்ததிலிருந்து கணக்கிடப்பட்ட நுற்றாண்டு கால அளவு, நுற்றாண்டு நிறைவு நாள்.