English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ceremonious
a. வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள, சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற, வினைமுறைகளில் உன்னிப்பான, ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற, சடங்குகள் நிறைந்த.
Ceremony
n. வினைமுறை, சமயச்சடங்கு, கரணம், புறவினை, ஒப்புக்குரிய நடைமுறை, மரியாதையான ஒழுகலாறு, உள்ளீடில்லாத வெறும் ஆசாரம், ஆரவாரம், ஆடம்பரம், புறச் செயல் முறைமை, ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Cerge
n. வேதிகையின்முன் ஏற்றப்படும் பெரிய மெழுகுத்திரி விளக்கு.
Ceric
a. (வேதி.) உலோகவகைத் தனிமத்துக்குரிய, 'சீரிய'த்துக்குரிய.
Cerise
n. தௌதவான இளஞ்சிவப்பு நிறம், (பெ.) தௌதவான இளஞ்சிவப்பு நிறமுள்ள.
Cerium
n. அணுஎண் 5க்ஷ் உள்ள உலோகத் தனிமம், சீரியம்.
Cernuous
a. (தாவ.) அசைகிற, கீழ்நோக்கி வளைந்துள்ள, கவிழ்ந்து தொங்குகிற, ஊசலாடுகிற.
Cerograph
n. மெழுகின் மேல் எழுதிய எழுத்து, உருக்கிய மெழுகில் வரைந்த வண்ணப்படம், மெழுகு பரப்பியுள்ள தட்டில் செய்யப்பட்ட செதுக்கு வேலை.
Cerography
n. மெழுகில் எழுதும் எழுத்து, மெழுகைக் கொண்டு எழுதுதல், மெழுகின்மீது தீட்டும் செதுக்குக்கலை, உருக்கிய மெழுகில் வண்ணப்படம் வரைதல்.
Ceromoncy
n. நீரில் உருகிய மெழுகை விடுவதனால் உண்டாகும் வடிவங்களைக் கொண்டு வருவதுணர்த்தல்.
Ceroplastics
n. மெழுகில் உருவமைக்கும் கலை.
Ceroplatic
a. மெழுகினால் உருவமைக்கப்பட்ட, மெழுகில் உருவமைப்பது பற்றிய.
Cerous
a. (வேதி.) சீரியம் கலந்த.
Cerpgraphic, cerographical
a. மெழுகின்மேல் எழுதுவதற்குரிய, மெழுகின்மேல் செதுக்கு வேலை செய்வது பற்றிய.
Certain
a. உறுதியான, நம்பகமான, தவறாத, பிழைபட முடியாத, முழுமன உறுதிப்பாடு கொண்ட, ஐயத்துக்கு இடமற்ற, வாதத்துக்கிடமில்லாத, முடிந்துபோன, முடிவான, தீர்மானமான, விலக்கமுடியாத, நடந்து தீரவேண்டிய, கட்டாயமான, நிலையான, ஒழுங்கான, ஏதோ சில, ஏதோ ஒரு.
Certainly
adv. கட்டாயமாக, உறுதியாக, ஐயமற.
Certainty
n. ஐயுறவிலா உண்மை, நிகழ்ச்சி உறுதிப்பாடு, தவறாத தன்மை, கட்டாயமாய் நேரிடக்கூடியது.
Certes
adv. (பிர.) நிச்சயமாக, ஐயமின்றி.
Certifiable
a. சான்று வழங்கத்தக்க.