English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chasse(2), chasse-caf
n. (பிர.) காப்பி அருந்தியபின் உட்கொள்ளுதற்குரிய மணம் ஊட்டப்பெற்ற இன்மது வகை.
Chassepot
n. (பிர.) 1க்ஷ்66-ஆம் ஆண்டில் பிரஞ்சு நாட்டு இராணுவம் பயன்படுத்திய சுழல் துப்பாக்கி வகை.
Chasseur
n. (பிர.) வேட்டைக்காரர், பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர், பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர், பணிச் சின்னமுடைய ஏவலாள்.
Chassis
n. பொறி வண்டிகளின் அடிச்சட்டம், பீரங்கி வண்டியின் அடித்தளம், விமானம் வந்திறங்கும் வண்டிக் கூண்டு.
Chaste
a. கற்புடைய, வழுவாத, சட்டவரம்பு மீறாத, அடக்க ஒடுக்கமுடைய, பண்பு நயமுடைய, தூய்மையான, கன்னி நலமுடைய, கற்புநெறி வழாத, குற்றமற்ற, வாக்கு நாணயமான, தன்னடக்கமுடைய, இயலௌதமை வாய்ந்த, பகட்டற்ற.
Chasten
v. தண்டித்துத் திருத்து, தண்டி, கண்டி, தூய்மைப் படுத்து, பண்புடையதாக்கு, படிமானம் பண்ணு, மட்டுப் படுத்து, பணியச் செய், அடக்கு.
Chastener
n. தண்டித்துக் குற்றம் களைபவர், தூய்மை செய்பவர், தண்டித்து அடக்குபவர், கண்டிப்பவர்.
Chasteness
n. கற்புடைமை, தூய்மை, பகட்டற்ற நிலை.
Chastenment
n. தூய்மைப்படுத்தும் செயல், தண்டனை.
Chastisable
a. தண்டித்துத் திருத்தக்கூடிய, அடித்து அடக்கத்தக்க.
Chastise
v. திருத்துவதற்காகத் தண்டி, கண்டி, கடிந்து கொள், ஒழுங்கிற்குக் கொண்டுவா, படிய வை, பணிய வை.
Chastisment
n. தண்டனை, கண்டனம், கண்டித்துத் திருத்துதல், ஒறுப்பு, கண்டிப்பு, கண்டனக் கருவி, கண்டன விளைவு.
Chastity
n. தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, கற்புடைமை, கன்னித் தன்மை, தூய்மை, பண்புயர்வு, நடுநிலைமை, எளிமை நயம்.
Chasuble
n. கடையணு வழிபாட்டின் போது கிறித்தவக் குருமார் அணியும் கையற்ற புற ஆடைவகை.
Chat
-1 n. இன்னுரையாடல், (வி.) அளவளாவி உரையாடு.
Chat
-2 n. குயிலினம் உள்ளிட்ட சிறு பறவை வகை.
Chateau
n. (பிர.) அரண், மாளிகை, கோட்டை வீடு, நாட்டுப்புற மாளிகை.
Chatelain
n. மாளிகைத் தலைவன், கோட்டை முதல்வன்.
Chatelaine
n. மாளிகை முதல்வி, அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம், கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.