English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Charms
n. pl. தனிக் கவர்ச்சிக் கூறுகள், வனப்புகள்.
Charnel-house
n. எலும்புக் கிடங்கு, கல்லறை எலும்புகளைக் கொட்டும் இடம்.
Charon
n. கிரேக்க பழங்கதையில் கீழுலக ஓடக்காரன், இறந்தவர்களின் ஆவிகள் எரியுலக ஆற்றினைக் கடக்க உதவும் படகோட்டி.
Charpie
n. காயங்களைக் கட்டப் பயன்படும் மென் பஞ்சுத் துணிப்பட்டை.
Charpoy
n. (இ.) எளிய கட்டில், சித்திரப் பூவேலை செய்த படுக்கை.
Charqui
n. வற்றவிட்ட மாட்டிறைச்சிக் கீற்று.
Charry
a. கரி சார்ந்த, கரியைப்போன்ற.
Chart
n. மாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை.
Charta
n. பட்டயம், உரிமைப்பத்திரம்.
Chartaceous
a. தாளுக்குரிய, காகிதம் போன்ற.
Charter
n. பட்டயம், தனியுரிமைப் பத்திரம், நகர ஆட்சி உரிமையாவணம், சிறப்புரிமைச் சான்று, சலுகை உரிமைச் சீட்டு, சலுகை, விலக்கு, விடுபாடு, (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய், ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு, தனி உரிமையளி.
Chartered
a. பட்டயம் பெற்ற, ஆவணமுடைய, தனி உரிமை வாய்ந்த, சலுகை பெற்ற, வாடகைக்கு விடப்பட்ட.
Charterhouse
n. பழைய மடத்து மனையில் நிறுவப்பட்டுள்ள லண்டன் ஏழை விடுதியின் பெயர், லண்டன் மருத்துவ மனையின் பெயர், லண்டன் பள்ளியின் பெயர்.
Charter-member
n. தொடக்கத்திலிருந்து நிலைபெறும் உறுப்பினர்.
Charter-party
n. கப்பலுரிமையாளர்-வணிகர் ஆகியவரிடையே முற்றுவிக்கப் பெறும் கப்பல் வாடகை ஒப்பந்தம்.
Charthouse
n. கப்பலின் கடல்நெறி செய்தி விளக்க வரைப்படங்கள் வைக்கப்படும் அறை.
Chartism
n. (வர.) இங்கிலாந்தில் 1க்ஷ்3க்ஷ்-இல் நடைபெற்ற பேருரிமைக் கிளர்ச்சியியக்கம், (பெ.) பேருரிமை கிளர்ச்சியியக்கம் சார்ந்த.
Chartless
a. கடல் நெறி விளக்கப்படங்கள் இல்லாத, செய்தி விளக்கக் குறியீட்டுப் படமற்ற.