English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Charivari
n. ஆரவாரக் கேலிக்கூத்து, பல்கூட்டொலி, இரைச்சல், கம்பலை.
Chark
n. கரி, சுட்ட நிலக்கரி, (வி.) எரித்துக் கரியாக்கு.
Charlatan
n. போலி மருத்துவன், போலி அறிஞன், பகடி, திறமையற்றவன்.
Charlatanic, charlatanical
a. போலி அறிஞனுக்குரிய, போலியான.
Charlatanism
n. போலி அறிஞர் இயல்பு, பகட்டாவார நடிப்பு.
Charlatanry
n. திறமை உள்ளவர்போல் நடித்தல், வைத்தியர்போல் பாசாங்கு செய்தல்.
Charless Wain
n. கலப்பை விண்மீன் குழு, சப்தரிஷி மண்டலம்.
Charleston
n. முழங்காலைப் பக்கவாட்டில் எறிந்தாடும் அமெரிக்க நடனவகை.
Charlock
n. காட்டுக் கடுகு, மஞ்சள் வண்ணச் சிறு பூ உடைய களைச்செடி வகை.
Charlotte
n. அப்பத் துண்டுகளிட்டுப் பொதிந்த பழப் பாகடைப் பண்ணிய வகை.
Charm
-1 n. மயக்கும் ஆற்றல், மருட்சி, கவர்ச்சிக் கூறு, அழகு, இனிமையூட்டும் பொருள், மாயச்சொல், மந்திரத் தொடர், மறை ஆற்றல் வாய்ந்த வாசகம், மந்திரம், தாயத்து, சிறுதிற அணிமணி, (வி.) மயக்கு, மகிழ்வி, மனத்தைக் கவர், கவர்ச்சி செய், இசையோடு பாடு, மந்திரத்தால் மயக்கு.
Charm
-2 n. சிறுபறவை வகைகளின் தொகுதி.
Charmed
a. மந்திரத்தால் மயக்கப்பட்ட, மகிழ்விக்கப்பட்ட, தனி ஆற்றலால் காக்கப்பட்ட.
Charmer
n. மந்திரத்தால் மயக்குபவர், பேரழகி.
Charmeuse
n. மென்மையும் வழவழப்பும் கொண்ட பட்டு ஆடைக்கான இழைமப்பொருள்.
Charmful
a. கவர்ச்சி மிக்க, வனப்புக் கூறுகள் செறிந்த.
Charming
a. கவர்ச்சி மிக்க, வனப்புடைய, இனிமையூட்டுகிற, மகிழ்ச்சியளிக்கிற.
Charmingly
adv. அழகொழுக, கவரும் வகையில், மருட்சியூட்டும் முறையில்.
Charmless
a. கவர்ச்சியற்ற, வனப்புக் கூறுகள் இல்லாத.