English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chappy
a. வெடிப்புகள் நிறைந்த, பிளவுகள் செறிந்த.
Chapter
n. ஏட்டின் தலைப்பிரிவு, அதிகாரம், இயல், அத்தியாயம், முழுக்கூறு, பொருட் கூறு, நிகழ்ச்சிக்கூறு, சட்டப் பெரும் பிரிவு, கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம், துறவியர் குழுக்கூட்டம், சங்கம், கழகம், கூட்டுக்குழு, மணிப்பொறியின் ரோம எண்கள், (வி.) இயல் வகு, இயல்களாகப் பிரி, கடி, கண்டித்துத் திருத்து.
Chapter-house
n. கட்டளைக் குருக்கள் கூடுமிடம்.
Chaptrel
n. வளைவினைத் தாங்கும் தூணின் தலைப்புப்பகுதி.
Char
-1 n. நாள் வேலை, இடைவேலை, வீட்டுப்பெருக்கல் மெழுகல் பணி.
Char
-2 n. மலை ஏரிகளிலும் ஆறுகளிலும் உள்ள சிறு மீன் வகை.
Char
-3 n. கரியாக்கு, தீய், தீய்க்கச் செய், தீய்ந்து போகச் செய்.
Chara
n. நன்னீர்வாழ் கடற்பாசியினச் செடிவகை.
Char-a-banc, char-a-bancs
n. (பிர.) நீண்ட உலாப்பயண ஊர்தி வகை.
Character
n. சிறப்பியல்பு, பண்பு, மரபுக்கூறு, நற்குணம், ஒழுக்க உரம், நற்பெயர், நன்மதிப்பு, மதிப்பு, படிநிலை, பண்பு விளக்கம், நற்சான்று, தனிக்குறியீடு, எழுத்து, வரி வடிவு, உருவடிவம், குறிவடிவம், கையெழுத்து, நன்மதிப்புடையவர், பண்புடையவர், பண்புரு, தெரிந்த மனிதர், ஆள், கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு, பண்போவியம், நடிப்புறுப்பினர், நடிப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர், (வி.) உருவாக்கு, செதுக்கு, வரை, எழுது, விரித்துக் கூறு.
Character-essay
n. குணநலக் கட்டுரை, பண்போவிய விரிவுரை.
Characterism
n. தனிச்சிறப்புப் பண்பு, பண்பு விளக்கம், வருணனை.
Characteristic
n. தனிச்சிறப்புப் பண்பு, வேறுபரத்திக் காட்டும் இயல்பு, பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு, (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு, (பெ.) முனைப்பான, தனிச் சிறப்பான, குறிப்பிடத்தக்க, தனிப்பண்பு மூலமான, மரபுக் கூறான, மரபியைவான.
Characteristically
adv. குறிப்பிட்ட வகையில், தனித்தன்மையாக, சிறப்பியல்பாக.
Characterization
n. பண்புரு வருணனை, பண்பேற்றக் குறிப்பீடு.
Characterize
v. பண்பு விரித்துரை, தனிச்சிறப்புக்களால் விளக்கு, வருணி, தனித்தன்மையளி, தனிச்சிறப்பாய் அமை.
Characterless
a. குணச்சிறப்பற்ற, தனிச் சிறப்புப் பண்பிலாத, சான்று பெறாத.
Character-literature
n. குணநல இலக்கியம், பண்போவியக் கட்டுரை இலக்கியம்.
Charade
n. சொல் அல்லது அதன் பகுதிபற்றிய குறிப்பு அல்லது சாடையைக்கொண்டு சொல்லை ஊகித்துக் காண முயலும் விளையாட்டு.